பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


புகழ் 31 ஈதல் முதலியன மேற்கொண்டு புகழ் ஈட்டினும் தவறில்லை எனவும் அறிய முடிகின்றது. ஆனால், துறவறத்தாரோ தம்மை மறந்த தெய்வ நெறியில், வெறும் புகழ்ச்சிக்காகவோ வேறு உயர்வுக்காகவோ ஆசைப்பட்டு எதையும் செய்ய லாகாது என்பதையும் ஈண்டு பெற வைத்துள்ளார் வள்ளுவர். மணிவாசகரும் உற்றாரையான் வேண்டேன். ஊர் வேண்டேன். பேர் வேண்டேன், எனக் கூறியிருப்பது ஈண்டு நோக்கற்பாலது. எனவே, இல்லறத்தான் புகழ் ஈட்டுவதில் தவறில்லையாம். • : இப்புகழினை வள்ளுவர் பல தொடர்களால் விளக்கிக் காட்டுகின்றார். உயர்ந்த புகழ்'(3), நீள் புகழ் (4) இசை என்னும் எச்சம் (8) என்று புகழ் விளக்கப் பெறுகின்றது. 'தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழ்' என முன்னதற்கு உரை கூறுகின்றார் பரிமேலழகர் , மற்றுள்ள பொருள்கள் போலன்றி அழியாது நிற்கும் புகழ்' என்பவர் மணக்குடவர். பிறரும் இவ்வாறு உரை காண்பர். அப்படி நீள் புகழுக்கும் பொருள்விளக்கம் பெறுகின்றோம். இசை என்னும் எச்சம்' என்று புகழைப் போற்றுவது பற்றியும் உரையாசிரியர்கள் நன்கு விளக்குகின்றனர். செய்தவர் இறந்து போகத் தான் இறவாது நிற்கும் என அதன் பெருமையைப் பரிமேலழகர் குறிப்பர். ஆம். ஒருவன் தேடிய பிற செல்வங்களெல்லாம் இல்லையாகவும்-ஏன்?-செய்த அவனே இல்ல்ையாகவும் அவனுக்கு அவன் நற்செயல்களால் வந்த புகழ் மட்டும் என்றென்றும் நிலைத்து நிற்கும் நிலை நாம் காணும் ஒன்றல்லவா! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த வள்ளுவரும் பிற பெரியவர்களும், நம்முடன் வாழ்ந்து செயற்கரும் செயல் செய்து மறைந்த அண்ணல் காந்தியடி களும் இத்தகைய உயர்ந்த, நீள்புகழ் பெற்றவர்களன்றோ! ஆம். நம்மை அத்தகைய புகழ்தரும் நற்செயல்களைச் செய்யு மாறு ஆற்றுப்ப்டுத்துகின்றார் வள்ளுவர்.