பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சான்றோர் வாக்கு


30 சான்றோர் வாக்கு பெறுதல் என எண்ணும் நிலையில், உள்ளதை மற்றவர் களுக்கும் கொடுத்து அதனால் பெறும் புகழே ஊதியம் என அவர் காட்டுகிறார். உண்மையும் அதுதானே. நாம் பெறு கின்ற பொருளாகிய ஊதியம் நம்மைவிட்டுச் செல்வோம்' செல்வோம்’ என்று சென்று கொண்டே இருக்க, இப்புகழாகிய ஊதியம் நாம் மறைந்த பின்பும் என்றும் நிலைத்து நம்மை வாழ வைக்கின்றதல்லவா உள்ளதை இல்லவருக்குக் கொடுப்பவர் என்றும் வற்றாத புகழ் பெறுவது ஊதியமன்றோ. ஆம் பிற அனைத்தும் உலகில் நில்லாது மறைய இந்தப் புகழ் ஒன்றே மனிதனை என்றும் வாழ வைப்ப தாகும். இதைத்தான் வள்ளுவர் ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் என மற்றொரு குறள் வழியே காட்டுகிறார். நில்லா வாழ்வுடைய உலகத்தை ஒன்றா உலகமே எனக்காட்டி, இந்த நிலையில்லாத உலகத்தில் என்றும் நிலைப்பது புகழ் ஒன்றே என்பதை இக்குறள் வழி வள்ளுவர் விளக்கி, என்றும் எப்படியும் வாழ நினைக்கும் மனிதன், இத்தகைய புகழ் பெறவாவது நல்லன செய்து அல்லன கடிந்து அறமாற்றி ஓங்கமாட்டானா என ஏங்குகின்றார். எனவே, நிலைபெற்ற புகழைப் பெற, நிலை யற்ற மனிதன் தன் நிலையற்ற பொருள் முதலியவற்றால் சிறக்க அறமாற்ற வேண்டும் என அறிதல் வேண்டும். அதிகார வைப்பு முறையும், இயல்வகையும் வள்ளுவரே செய்தாரா அன்றி வேறு யாரேனும் பின் செய்தனரா என்ற விவாதம் இன்னும் முடியவில்லை. எப்படியாயினும், இப் புகழ்' என்னும் அதிகாரம் இல்லற இயலின் கடைசியாக அமைய, அடுத்துத் துறவறவியல் தொடங்குகிறது. எனவே, புகழ், இல்லறத்தான் இதற்கு முன் அவன் வாழ்வாங்கு வாழ வகுத்த நெறியில் நிற்பானாயின் அவனைத் தானே வந்து அடையும் என்பதும் பெறப்படும். அன்றி, அந்த இல்வாழ் வான்தன் சுற்றம், நிலை, சுற்றுச் சார்பு முதலியன கருதி