பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


புகழ் 29 கொடிய நிலையைச் சுட்டி, எனவே இல்லையென்றுரைப் போர்க்கு இல்லை என்றுரையா இதயத்தோடு வாரி வழங்கிப் பொருளாதாரச் சமத்துவத்தை நாட்டில் நிலைநாட்டச் சொல்லுகிறார் வள்ளுவர். இந்த உண்மை மக்களால் உணரப் பெறின் பதுக்கலும் கொள்ளையும் கறுப்புச் சந்தையும் கள்ளச் சந்தையும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் நாட்டில் நீங்கி, எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற, தனி மனித வாழ்வும் சமுதாய வாழ்வும் மலர்ந்து, நாடும் உலகமும் நலமுற்று ஓங்குமன்றோ! புகழ் சமுதாயம் சிறந்து வாழ ஈகையினை அறத்தாறு வற்புறுத்திய வள்ளுவர், அறவழி நிற்க மறுப்பவரை நோக்கி, 'தம்பி உன் புகழுக்காக வாயினும் கொடு’ என்று குறிப்பது போன்று இங்கே புகழ் என்னும் அதிகாரத்தின் முதல் இரண்டு குறட்பாக்களையும் அமைத்துள்ளார். ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்ற முதற்பாவிலேயே கொடுத்தலையும் அதன் வழியே புகழ் பெறுதலையும் சுட்டி, அந்தப் புகழாகிய ஊதியம் பெறுதலே உயிர்க்கு உயர்ந்தது என விளக்குகிறார் வள்ளுவர். எப்படியாவது உள்ளவன் மற்றவருக்கு வழங்கினால் போதும் என்ற மனமுடையவரன்றோ வள்ளுவர். உலகில் ஊதியம் பெற விரும்புவோரே அனைவரும். செய்த பணிக்கு ஊதியம் பெறுநிலை ஒரு புறம் இருக்க, செய்யாத பணிக்கும் பெரு ஊதியம் வேண்டி நிற்கும் மக்களிடை வாழும் நமக்கு இந்த வள்ளுவர் காட்டும் ஊதியம் புதிய ஒன்றுதான். தான் சேர்த்து வைப்பதை ஊதியம்