பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சான்றோர் வாக்கு


40. சான்றோர் வாக்கு இதன் கடைசிக் குறளில் இந்தத் தலைப்பே வருகிறது. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்ற குறளே அது. இந்த ஈரடிகளால் வள்ளுவர் பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றார். முதலில் கொல்லாமையினைச் சொல்லுகிறார். பின் கொல்லாமை' என்றே இதே துறவறத்தைச் சார்த்தி ஒரதிகாரத்தில் பத்துக் குறளைப் பாடி இருக்கும் வள்ளுவர், இங்குப் புலாலை மறுத்தலையே வற்புறுத்துகிறார். இங்கே பத்தாவது குறளில் எல்லா உயிரும் தொழும் என்பது போன்றே, அங்கும் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்: என்கின்றார். எனவே, வள்ளுவர் உயிர் ஒம்பும் அறத்தை நூல் முற்றும் கைப்பற்றியவராதலின் இங்கே இந்த அறத்தை யும் கடைப்பிடிக்க வற்புறுத்துகிறார். அத்துடன் அதற்கு, அவர் அறநெறியினை மட்டுமன்றிப் பிற வாழ்வு நெறிகளையும் சுட்டிக் காட்டுகின்றார். இந்த இறுதிக் குறளில் முதலில் கொல்லாமையினை வற்புறுத்தி, அடுத்து புலாலை மறுத்தானை’ எனச் சுட்டுகின்றார். இதற்கு உரை கூறும் ஆசிரியர் அனைவரும் இரண்டினையும் தனித்தனியே பிரித்துக் காட்டியுள்ளனர். எனவே கொல்லுதலும், புலால் உண்ணலும் அறநெறிக்கு மாறுபட்டன என்பது வள்ளுவர் கருத்து. 'உயிர் ஒம்பும் அறத்துக்குக் கொல்லாமை மாறுபட்ட தன்றே! எனவே, கொலை கருதி வாழாத ஒருவனை. உலகில் எல்லா உயிரும் தொழுவதில் வியப்பில்லை அல்லவா ! உலகில் எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைக்கின்ற எந்த உள்ளமும் ஒர் உயிரைக் கொல்ல நினைக்குமா? நினைக்காதே. மாறாக, அந்த உயிர்களின் வளர்ச்சியினையும், இன்பத்தினையுமே நினைக்கக் கடமைப் பட்டவர் எனச் சுட்டிக்காட்டி, மேலே வேறு வகையிலே பிற உயிர்களின் புலாலினை உண்ண நேரினும் அதையும் மறுக்க வேண்டும் என விளக்குகிறார். அவ்வாறு இரண்டு வகை