பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


புலான் மறுத்தல் 41, யான-ஒரே உணர்வில் அரும்பிய பேரறத்தினைக் கைப் பற்றிய ஒருவரை எல்லா உயிரும் தொழுது வழிபடுவதன்றி வேறு என் செய்யும்? அங்கேயும் வெறும் தொழுகையினைக் கூறாது கைகூப்பி ன்ற தொடரையும் பெய்கின்றார். ஆம்! கையும் காலும் மெய்யும் பிற உறுப்புக்களும் கொண்டவற்றின் மாமிசத்தைத்தானே நாம் புலால்' என்கின்றோம். அவற்றைக் கொல்வதைத்தானே கொலை என்கிறோம். எனவே, தம்மிடம் கருணை காட்டும் அந்தத் தயவாளனை 'எல்லா உயிரும் தொழும்' என்று வள்ளுவர் கூறுவதில் வியப்பில்லை அல்லவா! சிறப்பு வகையால் கைகூப்பி' என்பதும் எல்லா உயிர்களும் என்று கூறுவதும் பொருந்துவ g5srld. இனி, இந்த அதிகாரத்திலே வள்ளுவர் வேறொரு கொள்கையினையும் வன்மையாகக் கண்டிக்கிறார். உயிர் களை அவிப்பலி இட்டு வேட்டல் செய்யும் முறை நாட்டில் தொன்மையான மரபாகும். அந்த மரபு இன்று இல்லையாக மறைந்து வருகிறது. சட்டத்தின்படியும் அத்தகைய யாகங் களை இன்று செய்ய முடியாது, எனவே, வள்ளுவர் அன்றே அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என இந்த அதிகாரத்திலேயே சொல்லு கிறார். இதில் புலாலை மறுப்பதை மட்டுமன்றிக் கொலை யினையும் சேர்த்து உயிர் செகுத்து உண்ணாமை என்று குறிக்கின்றார். வேட்டல் ஒருசிலரால் ஏற்றுக் கொள்ளப் பெற்றதாயினும், உலக நியதிக்கு அது பொருந்தாது என்பது இன்றும் பலவகையில் நன்கு விளக்கப் பெறுகின்றது. அதன் பொருட்டால் செய்யும் உயிர்க் கொலையும் தவறு என மக்களாலும், சட்டங்களாலும் கண்டித்து ஒதுக்கப் பெற்றுள்ளது. வள்ளுவர் இவற்றையெல்லாம் எண்ணித் தான் போலும் அந்த நல்ல உயிர் செகுத்துண்ணாத affr–3