பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

சான்றோர் வாக்கு


42 சான்றோர் வாக்கு அறத்தினை நன்று' என்று சுருக்கமாகவும் தெளிவாகவும் காட்டிவிடுகிறார். எனவே மேலே கண்ட இரண்டு குறட் பாக்களாலும் வள்ளுவர் கொலையும் புலாலையும் தவிர்க்க வேண்டியன என்றும் அந்த நல்ல அறநெறியைப் பின்பற்றிய வர்கள் என்றும் உயர்ந்து உலக உயிர்கள் அனைத்தாலும் போற்றும் வகையில் சிறப்பார்கள் என்றும் சுட்டி, அவற்றின் வழியே சமுதாயத்தில் நடைபெறும் பெருங்கொடுமையாகிய கொலையை நீக்க வற்புறுத்துகின்றார். புலாலை மறுக்க வள்ளுவர் காட்டும் வேறு காரணங் களும் ஈண்டு எண்ணத்தக்கனவாம். மற்றொரு குறட்பாவி லேயேயும் அருளுடையார் இக் கொல்லாமையினையும், ஊன் தின்னாமையினையும் போக்க வேண்டும் எனவும், அவ்வாறு போக்கா விடின் அவர் அருளுடையராகார் எனவும் குறிக்கிறார் வள்ளுவர். அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்' என்பது அவர் வாக்கு. இங்கே அருள் நீங்குவதோடு மட்டுமன்றி, ஊன் தின்பதனால் யாதொரு பயனும் இல்லை என்பதையும் வற்புறுத்துவதாக மணக்குடவர் குறிப்பார். - உலக வாழ்வொடு பொருந்திய இருகாரணங்களையும் வள்ளுவர் காட்டத்தவறவில்லை. உடம்பில் புண் உண்டாயின் எத்தனை அறுவறுப்புற்று அப்புண்ணை நீக்க நாம் முயல்கின் றோம். புறத்தே காணும் புண்களைத்தான் துப்புரவு செய்து தூய்மைப் படுத்துகின்றோம். ஆனால் உடலுக்கு உள்ளே இருக்கும் புண்களையும் அவற்றை உண்டாக்கும் லட்சக்கணக் கான கிருமிகளையும் யாரே தெளிந்து அறிவார்? எங்கேனும் வீக்கமோ அன்றி நோயோ உண்டான பிறகே மருத்துவரை நாடுகிறோம். அவர் உள்ளீடு காணும் கருவியால் (X ray) படம் எடுத்து, பிறகு அங்கங்கே உண்டாகி இருக்கும் புண் களைக் கண்டு அறுத்தோ வேறு வகையிலோ ஆற்றிக் குணப் படுத்துவர். அறிவுடைய மனிதன்-நல்லதை ஆய்ந்து