பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


புலான் மறுத்தல் 43 உண்ணும் மனிதன்-வருமுன் காக்கும் மனிதன் செயலே இவ்வாறு அமையுமாயின் வாயற்ற- விளக்கிக் காட்ட முடியாத-என்னவென்று சொல்லமுடியாத விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் வயிற்றிலும் பிற உறுப்புக்களிலும் என்னென்ன புண்கள் இருக்கும் என்று யாரால் கணித்தறிய முடியும்? புலால் விற்பனையாளர்கள் இவற்றையெல்லாம் கண்டா உயிர்க்கொலை செய்து விற்கின்றனர். இல்லையே; எனவே புலால் வாங்கியோ அல்லது அறுத்தோ உண்ணுபவர் இவற்றையெல்லாம் பாராது அவற்றின் புண்ணோடு உண்டு தங்கள் வயிற்றிலும் வாயிலும் பிறவிடங்களிலும் புண்ணை உண்டாக்கிக் கொண்டு மருந்தகத்தை நாடிச் செல்ல மாட்டார்களா? எனவேதான், இதை உணராத பலர் புலால் உண்டு தம்மைக் கெடுத்துக் கொள்ளுகிறார்களே என அவர் அருளுள்ளம் வருந்த, "உணர்வார் பெறின் என உரைக் கின்றார். உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன் புண், அது உணர்வார் பெறின் என்பது முற்றிய குறள். எனவே அறத்தாறு கிடக்க, உலகில் நோயற்ற வாழ்வில் வாழநினைப்பவரும் எவரும் புலாலை நினைக்கக்கூடாது என எச்சரிக்கை செய்கிறார் வள்ளுவர். யாரே நோயற்ற வாழ்வை வாழ விரும்பாதார். இன்னும் மற்றொரு வகையிலும் தான் கொண்ட கருத்தை வள்ளுவர் விளக்குகிறார். உயிர் வாழ்வு ஊன் உண்ணாமையின் அடிப்படையில் அமைந்தது எனக் காட்டி, அந்த ஊன் உண்ணின் அண்ணாத்தல் செய்யாது அளறு' என உண்பார் படும் அவதியினையும் சுட்டுகிறார். அளறு என்பதற்கு நரகம்’ எனவே அனைவரும் பொருள் கொள்ளு கின்றனர். ஆனால் நரகத்தை நம்பாதவரும் உண்டே! அளறு என்பதற்குத் தமிழில் சேற்றுப்பள்ளம், சிதற வெடிக்கும் நிலை போன்ற பொருள்கள் உள்ளன. நாம் மேலே கண்டபடி கண்டவற்றின் புலாலினை உண்ணின் நோய் பற்றி நீங்காத