பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

சான்றோர் வாக்கு


44 சான்றோர் வாக்கு பெரும் நோயான சேற்றுப் பள்ளத்தில் விழ, அவர்கள் அதிலிருந்து மீளமுடியாது; அப்படியே முடிவினை எய்துவர் என்பதே பொருந்தும் பொருளாகும். மற்றொருவகையிலும், திடீரெனச் சிதறவெடித்து விழுவது போன்று இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, இரத்த நாளம் வெடித்தல் முதலியவற்றால் உடன் மறைந்தொழிவர் எனவும் கொள்ள லாம். பின்னர் மருந்து என்னும் அதிகாரத்தால் இயல்பான நோய்களுக்கு உற்ற மருந்தையும் நோய் வராது தடுக்கும் வகைகளையும் விளக்கும் வள்ளுவர், இந்த புண் உண்டலால் வரும் நோய்கள் பெறின் உய்தி இல்லை என்பதால் இங்கே குறித்தார். எனவே நோயின்றி வாழ விரும்புவாருக்கும் அருளுடை நெஞ்சினார்க்கும் ஒருங்கே அமைந்த அதிகாரமாக இது அமைகின்றது. வள்ளுவர் இதனால் மக்கள் எல்லா உயிரையும் தம் உயிர் போல் ஒத்து நோக்கி, ஊறு நேரா வண்ணம் காத்து, தமக்காகவாயினும் அவற்றிற்கு ஊறு இழைத்தலாகாது என வற்புறுத்தி, எல்லாரும் எல்லாமும் இன்புற்றிருக்க வழிகாட்டுகின்றார். அந்த வழிபற்றி ஒழுகின் வையகம் வாழும்! வளம் பெருகும்! தவம தமிழில் வழங்கும் பல்வேறு சொற்களுக்கு வள்ளுவர் பொருள் காணும் வகையே தனிப்பட்ட ஒன்றாகும். வள்ளுவர் உள்ளம் யார்க்கும் எனைத்தானும் துன்பம் செய்யாவகையில் உலகை ஈர்த்துச் செல்லும் நல் உள்ளம் ஆதலின், அதன் அடிப்படையிலேயே அவர் காட்டும் அனைத்து அறங்களும் அமைகின்றன. இந்த நெறியிலேயே உலகம் செல்லுதல் நேரியதாகவும் அமைவுடையதாகவும் உள்ளமையின், உலகம் வள்ளுவர் காட்டும் வழியினைப் பின்