பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


தவம் 45 பற்றுவதன்றி வேறு வழி இல்லை. வாய்மை எனப்படுவது யாதொன்றும் தீமை பயவாதவற்றைச் சொல்லுதல் என்றும், அறம் எனப்படுவது மனத்தில் அழுக்கற்றிருத்தலே என்றும், அறிவு என்பது பகைவர்களுக்கும் தீங்கு நினைக்காதது என்றும், கல்வி என்பது தாம் பெற்ற இன்பம் வையகம் பெறக் காண்பது என்றும் விளக்கங்காட்டும் வள்ளுவர், இங்கே 'தவம்’ என்ற சொல்லுக்கும் புதிய நல்ல தெளிந்த தேவை யான விளக்கத்தினைத் தருகிறார். உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு' என்று முதற் குறளிலேயே தவத்துக்கு விளக்கம் தந்துள்ளார். இதற்குப் பரிமேலழகர் உரை கூறுவதில் சற்றே மாறுபட்டா ராயினும், பிற உரையாசிரியர்களெல்லாம் நேரான உரை யினையே கூறியுள்ளனர். ஆம்! உண்மையாகத் தவம் என்பது தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும், அவ்வாறு வந்த துன்பங்களுக்குக் காரணமானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் யாதொரு துன்பம் செய்யாமையும் ஆம், இங்கும் எல்லா உயிர்களையும், பிணைத்தே உயிர்க்கு உறுகண் செய்யாமை என்று காட்டுகிறார். எனவே தவம்’ என்பது தன் துயர் தாங்குவதோடு பிற உயிர்க்கு ஏதம் செய்யாமையேயாகும். இதையேதான் பின் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை' என்று விளக்கிக் காட்டு கிறார் வள்ளுவர். பிறருக்குத் துன்பம் செய்யத்துாண்டுவன சினம், அவா ஆகியவையாதலின் அவற்றை நீக்க வேண்டு மெனப் பின்வரும் அதிகாரங்களால் வள்ளுவர் வற்புறுத்து கின்றார், இவை அனைத்தையும் உள்ளடக்கியே, பின்வந்த சிறுபஞ்சமூல ஆசிரியர், "உயிர்நோய் செய்யாமை உறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கண் செய்யாமை-செயிர்நோய் விழைவு வெகுளி இவை விடுவானாயின் இளிவன்(று) இனிது தவம்'