பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

சான்றோர் வாக்கு


46 சான்றோர் வாக்கு என்று நன்கு விளக்கியுள்ளார். எனவே, தவம் என்பது என்ன என்பதை வள்ளுவர் இந்த முதற் குறளின் மூலம் நன்கு விளக்கி, மேலும் அதுபற்றிய பிற விளக்கங்களை அடுத்து வரும் குறள்களினால் நன்கு காட்டுகின்றார். இவ்வாறு வரும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கும் துன்பம் செய்யவில்லையானால், அவன் நினைத்ததைப் பெறுவதற்குத் தடையும் உண்டோ அத் தகைய நல்ல உளமுடைய தவசி நிச்சயமாக வேண்டியதை இவ்வுலகில் பெறுவரன்றோ! வேண்டிய வேண்டி யாங்கெய்த லால் செய்தவம் ஈண்டும் முயலப் படும் என்பது வள்ளுவர் வாக்கு. இதற்குப் பரிமேலழகர் மறுமைக்கண் தாம்வேண்டிய பயன்களைப் பெறுதலால் ஈண்டு, இப்பிறவியிலேயே தவம் செய்ய முயலவேண்டும் என்று உரை எழுதுவர். இது பொருந் தாது. நல்லவன் எப்போதும் வேண்டியதைப் பெறுவதில் தடையில்லை. விரும்பின விரும்பினபடியே வருதலால் தவம் செய்தலை இவ்விடத்தே முயலவேண்டும்' என்ற மணக் குடவர் உரையே இங்கே சாலப் பொருந்துவதாகும். இனி, இதற்குமுன் வரும் குறளில் வேண்டிய என்பதை வள்ளுவர் குறிப்பால் உணர்த்துகிறார். ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்' என்பதே அக்குறள். இதற்குச் சற்றே தெளிவாகப் பரிமேலழகர் உரை கூறுவது பொருத்தமாகவுள்ளது. ஒன்னார் உவந்தார் என்பதற்குத் தம் அறமாகிய தவத்திற்கு மாறு பட்டவர் என்றும் அத்தவத்துக்கு ஒப்ப உகந்தவர் என்றும் பொருள் காட்டுகிறார் அவர். மேலும் தவசிக்கு-உற்ற நோய் நோற்று உயிர்க்கு உறுகண் செய்யாத தவசிக்கு-எப்படிப் பகைவர் உண்டாவார் என்ற கேள்வி எழுமல்லவா! அதற்கும் விளக்கம் தருகிறார் பரிமேலழகர். ஆம்! அவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இச்செயல்களை அவர்கள் மேல் ஏற்றாது, தவத்தின் மேல் ஏற்றி வள்ளுவர் கூறினார்