பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


தவம் 47 என்கிறார். பொருத்தமானதே தவத்திற்கு அந்த ஆற்றல் உண்டு என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் அத்தவத்தை மேற்கொள்ளும் தவசிக்கு அவை கூடாது என்பது தெளிவாக்கப் பெறுகின்றது. சிலர் எல்லாம் செய்ய வல்ல உயர்ந்த பதவியிலிருந்தும், மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாது அமைதியாகத் தம் கீழ் உள்ளவரைத் தழுவியும் மாற்றியும் நெறிப்படுத்தியும் சென்றால் அந்த நிறுவனமோ அரசோ செம்மையாக நடைபெறுமன்றோ! அதே அடிப்படை தான் ஈண்டு எல்லா ஆற்றலும் உள்ள தவத்திற்கும் அவற்றைக் கொள்ளும் தவசிக்கும் ஏற்றிக் காட்டப் பெறு கின்றது. இதனால் ஆற்றலும் ஆணையும் பெற்றவர்கள் மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாது செம்மை நெறியில் செல்ல வேண்டும் என்பதும், தவறின் நாட்டில் அல்லலும் அவதியும் அமைதியின்மையுமே நிலைக்கும் என்பதும் பெறப் படுகிறது. r வரும் துன்பத்தைத் தாங்குவதே தவத்தின் அடிப்படை என உணர்ந்து உணர்த்தும் வள்ளுவர், அத்துன்பத்தை ஏற்று மகிழ்வார் எவ்வாறு உலகில் சிறப்பார் என்பதை நல்லதொரு உவமையால் தெளிவுபடுத்துகின்றார். உலோகங்களில் உயர்ந்தது பொன் அல்லவா! ஆம்! அந்தப் பொன் கொண்டு விரும்பியவர் விரும்பிய வகையிலெல்லாம் அணிகளையும் செய்து கொள்வர். பொன்னை விரும்பாதவர் இலர். தவசி அத்தகைய பொன்போன்றவர்; வேண்டுவோர்க்கு வேண்டும் வகையில் ஆக்கம் செய்ய வல்லவரும் கூட. அப்பொன்னைத் தவசிக்கு உவமையாக்கிய வள்ளுவர், அப்பொன்னைச் சுட வைத்து, அந்த நிலையிலேயும் தவசியையும் ஒப்பிட்டுப் பார்க் கிறார். பொன் சுடச்சுட மேலும் மேலும் ஒளிவிடுமல்லவா, அப்படியே தவசியும் துன்பமாகிய வெந்தணலில் பட்டுச் சுடப் பெறச் சுடப்பெற உயர்வுறுவான் என உவமை வாயிலால், அத்தவசி உயர வேண்டுமானால் எத்தனைத் துன்பங்கள்