பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

சான்றோர் வாக்கு


48 சான்றோர் வாக்கு வரினும் இடுக்கண் வருங்கால் நகுக; என்று வள்ளுவரே காட்டியது போன்று, அவற்றைப் புன்முறுவலோடு ஏற்றுத் தாங்கி, அதே போது அத்துன்பம் செய்தார்க்கும் மற்றவர் களுக்கும் மனத்தாலும் மாணா செய்யாது வாழ வேண்டியவர் என்பதைத் தெளிவாக்குகிறார். எனவே தவ வாழ்வினைக் குறிப்பிடுவதன் மூலம் மனித வாழ்வும் அந்த அடிப்படையில் மலர வேண்டிய இன்றியமையா உண்மையினையும் வள்ளுவர் தெளிவாக்குகிறார். மேலும் வள்ளுவர் தவத்தை விளக்குமுகத்தான் வேறு சில தொடர்களையும் சொற்களையும் எடுத்தாளுகின்றார். 'தங்கருமம் செய்வார் தன்னுயிர் தான் அறப்பெற்றான்' "நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர். "நோற்பார்’ போன்ற தொடர்களும் சொல்லும் தவசியைக் குறிப்பனவே யாம். முதல் தொடரின் வழியே அவரவர்களுக்கு அமைந்த கடமையை-கருமத்தை வழுவாது செய்பவர்' யாவரும் தவசியே' என விளக்கி; உலகில் பிறந்தார் அனைவரும் அவரவர்களுக்கு அமைந்த கடமை நெறியிலிருந்து வழுவாது வாழ வேண்டும் என வற்புறுத்துவர். அடுத்துவரும் தொடரால் அவ்வாறு கடமை வழி ஒழுகி, உற்றார் மற்றார் வேறுபாடின்றி, காய்தல் உவத்தல் அகற்றி வாழ்வார் தம் உயிரைத் தம் வழியே இயக்கும் நிலை பெறுவர் என்கின்றார். தானறப் பெறுதல் தானே உயிர் என அறிதல் என்பர். அது, நான் யார்? உடலா உயிரா? என்று ஐயுறும் நிலை நீங்கி, எல்லாச் செயல்களுக்கும் காரணமாயதும் அவற்றின் பயனை அனுப்பவிப்பதுமாகிய உயிரையே தான் என உணர்ந்து, அதைத் தன் வழி இயக்கும் நெறி எய்துதலாம். மேலும் அவ்வுயிரை வேண்டுமாயின் உடலிலிருந்து நீங்காது நிறுத்தி வைக்கவும் முடியும், பாரத யுத்தத்திலே பெருந்தவசி’ வீடுமர் செய்தது போல, இதை வலியுறுத்துவதே அடுத்த தொடராகிய, "நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்'