பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


கூடா ஒழுக்கம் 49 என்பது. இதனாலும் தவசியைக் குறிப்பதோடு, அந்த ஆற்றல் பெற்றால் கூற்றம் குதித்தலும் கைகூடும் என்றார் குதித்தல் என்பதற்குக் கடத்தல் எனப் பொருள் காண்பர். எனவே சாவாது வாழவும் முடியும் என்பது பெறப்படுகிறது. அடுத்து வரும் நோற்பர்’ என்பதும் அத்தகையதே. இதன் வழியும் இக்குறள் வழியும் இவர்கள் எல்லாச் செல்வங்களையும் பெறுவர் என்பதும் பெற முடிகின்றது. இவ்வாறு இந்த அதிகாரத்தில் வள்ளுவர் தவம் என்பதன் விளக்கம் கூறி, அத்தவசியின் ஆற்றல் இன்னின்ன என்று எடுத்துக்காட்டி அந்த ஆற்றலைப் பிறர்மேல் பயன் படுத்தா வகையிலும் மற்றவரைத் துன்புறுத்தா வகையிலும் இருப்பின் அத்தவசி உயர்வான் என்பதைச் சுட்டி, அந்த ஆற்றல்மிக்க தவசியர் உலகில் விரும்பின் எதையும் சாதிக்க இயலும் என்பதையும் காட்டுகிறார். எனவே உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கடமை வழிநின்று காய்தல் உவத்தல் இன்றி, உயர்நிலையைப் பெற்று உயர வழி உண்டு’ என உணர்ந்து செயலாற்றுமாறு வேண்டி நிற்கின்றேன். கூடா ஒழுக்கம் தவத்தின் உயர்நிலையினைச் சுட்டிய வள்ளுவர் சிறப் பாக அத்தவசிக்கு உரித்தான ஒழுகலாற்றில் நிற்க வேண்டிய வழிகளையும் காட்டியுள்ளார். அதே நிலையில் புறத் தோற் றத்தால் ஒழுக்கம் உள்ளவர்போல் காட்டி, அகத்தே மாறு பட்டு ஒழுகும் மாக்களை நினைக்கிறார். எல்லாவகையிலும்உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும் பிற அனைத் திலும் போலி புகுந்துள்ள இன்றைய வாழ்வினைக் காணும்