பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சான்றோர் வாக்கு


50 சான்றோர் வாக்கு நமக்கு இப்போலி வாழ்வும் நன்கு புரியுமன்றோ! இன்றைய மனிதன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்’ வல்லவன் என்பதை நாட்டு நிகழ்ச்சிகளும் உலக நிகழ்ச்சி களும் நன்கு காட்டுகின்றன. எனவேதான் வள்ளுவர், அப்போலிகளைப் புரிந்து வாழ வேண்டும் என்று அன்றே உலகுக்கு எச்சரிக்கை விட்டுவிட்டார். அதிலும் மக்களுள் உயர்ந்தார் எனக் கருதும் நோற்பாராகிய தங்கருமம் செய் வார் போன்று பலர் உலகில் மாற்று நிலையில் புறப்பட்டால் என்னாவது? அவர்களைக் கண்டு அஞ்சி அவர்கள் அடியில் ப்ொன்னையும் பொருளையும் கொட்டி, தம்மை இழந்து மக்கள் வாடக்கூடாது என்பதற்காகவே இந்த கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தினை அவர் அமைத்துள்ளார். ஒழுகலாற்றினை முறைப்படுத்தி மக்கள் முன் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து வழி காட்டும் வள்ளுவர், அவ்வொழுக்கங் களைப் பின்பற்றுபவர் போல் நடிப்பவர் பலர் உலகத்தில் உள்ளமையின், அவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, இதில் பல உவமைகளையும் காட்டி விளக்கி யுள்ளார். மேல் தவசி தங்கருமம் செய்பவன் என்று திட்ட வட்டமாகக் கூறி விட்டமையின், புறத் தோற்றத்தால் யாரையும் கண்டு ஏமாற வேண்டா என நம்மை நேரிய வழியில் ஆற்றுப்படுத்துகிறார் வள்ளுவர். உலகில் தாழ்சடை வைத்தும் தலை மொட்டை அடித்தும் தவசி'களாகத் தம்மை கூறிக் கொள்வார் பலர் உண்மையின் அப்புறத் தோற்றத் தைப் பற்றியும் வள்ளுவர் கூற மறக்கவில்லை. மேலும் பல்வேறு வகையில் தம்புறத் தோற்றத்தாலும் பிற செய்கை களாலும் மக்களை மனந்திருப்புவார் எல்லாத் துறையிலும் உள்ள இன்றைய உலகத்தில் இந்த அறிவுரைகள் மிகவும் இன்றியமையாதன. மிக உயர்ந்தார் போன்று மேநாட்டு உடை உடுத்தும், பகட்டாக நடந்தும் பகல் கொள்ளை அடிப் போரைப் போன்றே, புறத்தோற்றத்தால் உயர்ந்த தவசி போல் நடித்துப் பல கொடுமைகளைச் செய்வார் உளர்