பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


கூடா ஒழுக்கம் sı அல்லவா! அனைவரையும் இனம் புரிந்து கொள்ளவே வள்ளுவர் இந்த அதிகாரத்தை வகுத்துள்ளார். முதலில் அத்தகைய கூடா ஒழுக்கம் கொள்ளும் அவனை நோக்கி, அவன் உள்ளும் புறமும் ஒத்திருக்க வேண்டிய தேவையை வற்புறுத்துகிறார். உன் உள்ளமும் உன்னுள் பொதிந்து நிற்கும் ஐம்பூதங்களும் காணாதவகையில் நீ ஒன்றும் செய்ய முடியாதே! அவற்றை விட்டு நீ வேறு வகை யில் இப்பொருந்தாத ஒழுக்கத்தை மேற்கொள்வாயாயினும் அவை உன்னைப் பார்த்துச் சிரிக்காதா! உன்னைப் பற்றி உலகத்தார் சிரிப்பதன் முன் உன் உள்ளமும் உள்ளே உள்ள ஐம்பூதங்களும் உன்னைப் பார்த்துச் சிரித்து வாழும் உன் வாழ்வு ஒரு வாழ்வா? எனக் கேட்கின்றார். ‘வஞ்சமனத் தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்' என்பார் அவர். மேலும் அடுத்த குறளில் இப்படி அவன் உள்ளமே அவனைப் பார்த்து நகைக்க, புறத்தே பலர் போற்ற உயர்ந்த தோற்றத்தனாய் விளங்குவது யாதொரு பயனையும் தராது எனச் சுட்டிக் காட்டுகிறார். தன் நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்று இவரே பின்னர் வேறு இடத்தில் காட்டுவது போன்று அவன் நெஞ்சே அவனைச்சுட அவன் இல்லையாகக் கழிந்தொழிவானன்றோ! . இனி வள்ளுவர் காட்டும் உவமைகளைக் காண்போம். நல்ல வயலில் உயரிய பயிர் பச்சைப்பசேல் என ஓங்கி நிற் கின்றது. பக்கத்திலே சென்ற ஒரு மாட்டிற்கு அதைத் தின்ன வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. எனினும் காவற் காரன் அதை அண்ட ஒட்டாது துரத்திக் கொண்டே இருக் கிறான். ஆகவே அந்த மாடு ஒரு சூழ்ச்சியில்-அதற்குக் கூடாத ஒழுக்கத்தில் இறங்குகிறது. எப்படியோ அதற்கு ஒரு புலித்தோல் கிடைக்கிறது. அதைப் போர்த்திக் கொண்டு