பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

சான்றோர் வாக்கு


52 சான்றோர் வாக்கு மாடு வயலருகில் செல்லுகிறது. காவலாளன் அதைப் புலி எனக் கண்டு அஞ்சி ஒடுகிறான், இங்கே உவமை இருவகையில் விளக்கப்பெறுகின்றது. ஒன்று புலி பயிரைத் தின்னாது என்பது; மற்றது அதனிடத்துக் கொண்ட அச்சம். அப்படியே கூடா ஒழுக்கத்தைக் கொண்ட புறக்கோலம் காட்டுபவர் தீங்கு செய்யமாட்டார் என்றும் அவர் கோபத்துக்குள்ளாக வேண்டும் என்றும் பிறர் அவர்களை ஒன்றும் செய்யார் என்ப தாம். எனினும் மாட்டின் மேய்ச்சலைக் கண்டு உண்மை உணர்ந்து அதை நையப்புடைத்த நொறுக்குவது போன்று இக் கூடாஒழுக்கில் உள்ளவனின் உண்மை நிலை அறிந்தபின் அவனை உலகிலேயே வாழவிடாது வதைத்துக் கழிப்யர் என உணர்தல் வேண்டும். வலியின் நிலைமையான் வல்லுருவம் பெற்றும் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று' என்பது குறள். மற்றொரு உவமை வழியே தவமறைந்து அல்லவை செய்தலை விளக்குகிறார். பறவைகளைப் பிடிக்கும் - வேடுவன் வலையை விரித்து, அதில் பறவைகள் விழுகின்ற னவா என்று புதலின் கண்ணே மறைந்திருப்பது போன்று, இவனும் தவவேடமாகிய புதலின்கண் மறைந்து தன் வசப் படுபவரை நிலைகெடுப்பான் என்கின்றார். மேலும் மற்றொரு குறளில் புறத்தோற்றத்தைக் கண்டு மதித்தல் எவ்வளவு தவறு உடையது என்பதை நன்கு உவமை காட்டி விளக்குகிறார். - வேடுவன் விடும் அம்பு வடிவால் நேராகவும் செம்மை யாகவும் இருக்கிறது. ஆனால் அதன் செயலோ மற்றவர் உயிரை வாங்கத்தக்க வகையில் அமைகின்றது. அதே வேளையில் யாழ் தோற்றத்தால் நேராக இல்லாமல் வளைந்து நெளிந்து உள்ளது. ஆனால் அந்த யாழ் எழுப்பும் இன் னொலியோ எதிரில் நின்று கேட்பாருக்கும் எங்கோ மறைவில் இருப்பார்க்கும் இன்பம் பயக்கும் நல்ல இசையை நல்குகிறது.