பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


கூடா ஒழுக்கம் 53 என்று உவமைகாட்டி, இதனால் வெறும் புறத்தோற்றத்தால் நேர்மையற்றவர்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறார் வள்ளுவர். அவர்கள் எத்தகைய கொடுமைக்கும் அஞ்சாதவர்கள் என உணர்ந்து விலகவேண்டும். அதே சமயத்தில் யாழ்போன்று தோற்றத்தால் விரும்பத்தகாதவ ராக-வேறுபட்டவராயினும் அவர் தம் செயலால் பயன் விளையுமாயின் அவர்கள் ஒழுக்க சீலர் எனக் கொண்டு அவர் கள் வழியே செல்லவேண்டும் என்கின்றார். எனவே உயர்ந் தார் அல்லார் என அறியப் பயன்படுவது அவர் தம் அகத் தோற்றமும் அதன்வழி அமையும் செயல்களுமேயன்றி வெறும் புறத்தோற்றத்தால் அவர்களை அறுதியிட வேண்டாம் என விளக்கிவிட்டார் வள்ளுவர். "கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் (கு) அன்ன, வினைபடு பாலால் கொளல்" என்பது குறள். இத்தனையும் சொல்லியபிறகும் சிலருக்கு விளங்கவில்லை என எண்ணிய வள்ளுவர், மேலும் நான் முன் குறித்தபடியே வெளிப்படையாகவே புறத்தோற்றத்தை நமக்குக் காட்டிவிடுகிறார். ஆம்! மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்’ என்பது அவர் வாக்கு. உலகில் மொட்டை அடித்துக் கொண்டும் தாழ்சடை வைத்துக் கொண்டும் துறவிகளாகத் தம்மைக் காட்டுபவர் பலர் உண்மையாலும் அவருள்ளே உண்மையில் உள்ளத்தால் அனைத்திலும் பற்றற்று நிற்பவர் மிகச் சிலரே ஆனதாலும், அவருள் பலர் உலகம் பழிக்கும் செயல்கள் பல செய்கின்றமை யாலும் இவ்வாறு 'உலகம் பழிக்காத செயலை செய்பவரே உயர்ந்தார் என்றும் மற்றவர் தோற்றத்தால் உயர்ந்தா ராகக் காட்டினும் ஒதுக்கத் தக்கவரே என்றும் கோடிட்டுப் பிரித்துக் காட்டிவிட்டார். இதையே பின்வந்த சமயநெறி பாடவந்த சுந்தரர்,