பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


கள்ளாமை 55 கொள்ளை கொண்டுசென்றாலும் அது திருடப்பட்டதெனத் தக்க சான்றுகளைக் காட்டி நிரூபிக்க வேண்டிய இக்காலத்தில், வள்ளுவர்காட்டும் உயர்ந்தநெறி திகைப்பைத்தான் உண்டாக் கும். ஒருவருக்கு உரிமையான பொருளை அவன் உரிமையி னின்று பறித்து தம் அதிகாரத்தாலோ வேறு வகையாலோ வெளிப்படையாக எடுத்துக் கொண்டு, அவ்வாறு எடுத்துக் கொள்வதைச் சரியெனக் காட்டி வாதிக்கும் இந்தக் காலத் துக்கு, வள்ளுவர் 'கள்ளாமை சற்றே புரியாத ஒன்றுதான். எனினும் எதிலும் உளந்திறந்து காட்டும் வள்ளுவர்தம் திறனையும் பண்பையும் இங்கேயும் நம்மால் காணமுடி கின்றது. உள்ளத்தால் உள்ளலும் தீதே, பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் என்ற குறள் வழி மிக உயர்ந்த அறப்பண்பினை அவர் விளக்கி விட்டார். வள்ளுவர் சிறந்ததை வற்புறுத்துவதற்கு, தேவையற்றதென நாம் நினைக்கும் சில சொற்களை வலிந்து பெய்து விளக்குபவர். இங்கே உள்ளல் என்றாலே போதும். உள்ளுவது உள்ளத் தால்தானே இயலும்? எனினும் அவ்வுள்ளத்தையும் பிணைத்து, உள்ளத்தால் உள்ளலும் என்று காட்டி 'உள்ளலும் என்றதில் உம்மையையும் இணைத்து காட்டி விழைந்ததைத் திட்டமாகவும் தெளிவாகவும் நன்கு, நாம் அறியும் படியும் காட்டி விட்டார். எனவே பிறர் பொருைைளத் திருடுவது மட்டும் குற்றமில்லை; திருட நினைப்பதுவே குற்றமாகும் என அறிதல் வேண்டும். நாம் மனத்திலே நினைப்பது யாருக்குத் தெரியப்போகிறது என்று எண்ணின் நாம் தவறு செய்தவராவோம். வள்ளுவர் பிற இடங்களில் சுட்டியபடி, மனமறியாத செயலோ நினைவோ இல்லை என்பதும், அம்மணமறிந்து-நெஞ்சறிந்து செய்யும் தவறுகளை அம்மனமே கரி யாக நின்று, செய்த அவனைச் சுட்டுப் பொசுக்கும் என்பதும் ஈண்டும் நினைக்கத்தக்கன. பிறர் பொருளைக் கேட்டு வாங்குதல் தவறு இல்லை. ஆனால் கள்வேம் எனல் தவறுடைத்து. திருடிக்கொள்