பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

சான்றோர் வாக்கு


56 சான்றோர் வாக்கு வோம் என்று நினைப்பதுவே தவறு என்று உலகம் உணரு மாயின் நாடு, நீதிமன்றங்களெல்லாம் அற்ற ஒரு நித்திய இன்பம் தரும் பொன்னாடாகப் பொலிவுறாதா? அத்தகைய நல்ல நிலையை நாம் பெற முடியுமா? நினைத்துப் பாருங்கள். எப்படிச் சேர்த்தால் என்ன? திருடின காசு என்று எங்கே குறித்திருக்கிறது. திருடித் திருடிச் சேர்த்துச் செல்வராவதில் என்ன தவறு? யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைக்கும் சிலரை நோக்கி வள்ளுவர் உன் மனத்துக்குத் தெரிந்து செய்யும் செயலானமையின் அது தவறு எனச்சுட்டிய தோடு அமையாது, அவ்வாறு மறைமுகமாகச் சம்பாதிக்கும் உன் செல்வம் பெருகுவது போன்று அழியும் எனச் சுட்டி னார். எனவே சிலகாலமே நிற்கும் அப்பொருளைச் சேர்க்க சிறுமையான களவினைச் செய்ய வேண்டாம் எனக் காட்டு கிறார், களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும் என்பது அவர் வாக்கு. ‘தீயது ஆவது போலக் கெடும் என்பது பழமொழி. இக்குறளில் அளவிறந்து' என்ற சொல்லை ஆக்கத்'துக்கு மட்டுமன்றி அழிவுக்கும் பயன்படுத்த வேண்டும், கிராமங்களிலே புதிய வெள்ளம் பழைய வெள்ளத்தையும் அடித்துச் சென்றது என்ற பழமொழி கூறுவார்கள். அதுபோல, களவால் ஆகிய ஆக்கம் அளவிறந்து நின்று, அளவு கடந்த நிலையிலே முன்னைய ஆக்கத்தையும் இல்லையாக அடித்துச் செல்லும் எனக் கொள்ளல் வேண்டும். ஆம் உள்ளதும் போக வஞ்சமனத் தான் வாடி வருந்த வேண்டிய நிலையில் தள்ளப் பெறுவான் என்பதாம். இந்த நல்ல உண்மையினை நாட்டில் நினைப்பார் எத்துணையர்? ஏதோ இந்த வேளைக்கு எல்லாம் கிடைக் கிறதே என்று எத்தனையோ கள்ளச் சந்தைகளை உருவாக்கி வளர்த்து, மக்களின் தேவையான பொருள்களை மறைத்து இல்லா நிலையை உண்டாக்கி, விலையை அதிகப்படுத்தி