பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


கள்ளாமை 57 அதனால் பெரும்பொருள் சேர்க்கப் பலர் முயல்கின்றார்கள். அம் முயற்சியில் சிலர் வெற்றி பெற்றமை போல் தெரியும். இந்தக் காட்சியைக் கண்டுதான் வள்ளுவர் இக்குறளை நமக்குத் தருகிறார். 'அவன் ஆக்கம் அளவிறந்து பெருகுவ தாக நினையாதே. சற்றே பொறுத்துப் பார். அவன் இன்று களவினால் சேர்த்த செல்வம் அவன் முன்னைய செல்வத்தை யும் அடித்துக் கொண்டு போகப் போகிறது என்கிறார். இந்த நிலை நாம் நாட்டில் காண்கின்ற நிலைதான். ஆனால் அந்தக் காட்சியினால் யார் மனம் திருந்துகிறார்கள்? பிறவிடங்களில் அருள், அன்பு என்றெல்லாம் வள்ளுவர் கூறுகிறார். அந்த உலகுக்கு இன்றியமையாத அருள், அன்பு அவற்றில் பிறக்கும் பிற நல்ல பண்புகள் அனைத்தும் இக்கள வாளிகளிடம் காணாதவை என்கின்றார் வள்ளுவர். வஞ்சனை யால் பிறர் பொருளைக் கொள்ளை கொண்டு கருப்புச் சந்தையில் பொருள் ஈட்டி, அதனால் ஏதோ பெரும் கொடைகள் செய்ய எவனாவது வந்தால் அவனைச் சமூகம் ஏற்காது ஒதுக்கித் தள்ளுக எனச் சுட்டுகிறார் வள்ளுவர். அவன்தன் கொடுமையை-களவால் கள்ளச் சந்தையால் பிறருக்கு உரிய, பிறருக்குத் தேவையான பொருள்களைக் கவர்ந்த கொடுமையை மறைக்கச் செய்யும் பகட்டான போலிச் செயல்களே அவை என ஒதுக்கச் சமுதாயம் கடமைப் பட்டிருக்கின்றது. இந்த அவல நிலையினைத் தனி மனிதன் மட்டுமன்றிப் பேரரசுகளும் செய்யும் நிலையினைக் காண் கின்றோம். அலெக்சாந்தர் முன்னே ஒரு கள்வனை நிறுத்தி அவன் திருடியது குற்றம்’ எனச் சாடிய காலத்து, அவன் பிற நாட்டு மக்களின் பொருள்களைக் கொள்ளை அடித்தும் வஞ்சித்தும் பறித்துச் செல்லும் அலெக்சாந்தர் பெருங் கொள்ளைக்காரன் எனக் காட்டி அவனையும் திருத்தி, தன்னையும் விடுவித்துக் கொண்ட கதை நாடறிந்த Յքո՞-4 .