பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

சான்றோர் வாக்கு


58 சான்றோர் வாக்கு ஒன்றல்லவா! எனவே எந்த வகையிலும் பிறர் பொருளைக் "கள் வேம்’ எனக் கருதுவதோ கள்ளத்தால் கொள்ளுவதோ உலகச் சமுதாய வாழ்வை முற்றும் கல்லும் வேர்க் கொல்லி என உணர்தல் வேண்டும். அதையே வள்ளுவர் உணர வைக்கிறார். அத்தகைய கொள்ளையடிப்பவர் என்றும் அன்போ அருளோ உடையவராகி உலகுக்கு உதவுவார் என நம்பி எதிர்பார்க்க வேண்டாம் என்ற கருத்திலேயே அருள் கருதி அன்புடையராதல் பொருள் கருதி பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் என்ற குறளை நம் முன்வைக்கிறார். இந்த அதிகாரத்தில் அளவு என்னும் சொல்லை நான்கு குறட்பாக்களில் எடுத்தாளுகின்றார் வள்ளுவர். அளவின் கண் நின்றொழுகலாற்றார்’, ‘அளவென்னும் ஆற்றல்' அளவறிந்தார்', 'அளவல்ல செய்தாங்கே வீவர் என்பன அவர் கொண்டன. இந்த அளவு என்பது வாழ்வில் அறத்தாறு வாழும் அளவைக்குறிக்கும் உயர்ந்த சொல்லாகப் பயன்படுத்தப் பெறுகின்றது. உயிர் பற்றிய உண்மைகளை அறிதல், நேர் நிற்றல், நன்னெறி, யாக்கை நிலையாமை, காணல், நல்ல நினைவு, தவம், செய்யத் தகு நெறி எனப் பலவகையில் உரையாசிரியர்கள் இதற்குப் பொருள் கொள்ளு கின்றனர். அனைத்தும் அவரவர் கொண்ட கருத்துக்கு அரண் செய்யும் வகையில் அமைகின்றன. எனினும் அவற் றுக்கு மேலாக அவரவர் உழைப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற அளவு எனக் கொள்ளல் பொருத்தமாகும். உழைப்பாளியோ, முதலாளியோ அன்றி வேறு துறையில் செயல்புரிகின்றவர் களோ அவரவர் செய்யும் தொழிலுக்கும் திறனுக்கும் முதலீட்டுக்கும் பிறவற்றிற்கும் ஏற்பப் பெறுகின்ற பொருளைத்தான் அளவு எனக்குறித்தாரோ என நினைக்க வேண்டியுள்ளது. முதலாளி தன் முதலீட்டுக்கு அதிக அளவு பொருள் பெற விரும்புவதாலும் தொழிலாளி தன் செயல் திறனுக்கு அதிகமாகப் பொருள் பெறவிரும்புவதாலுமே