பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


கள்ளாமை 59 நாட்டிலே பல வேலை நிறுத்தங்களும் கதவடைப்புகளும் நடைபெறுகின்றன. அண்மையில் கூட ஒரு வேலை நிறுத்த இடையீட்டில் உற்பத்திக்கு ஏற்ற ஊதிய அமைப்பு' என்ற, வரையறையினை அரசாங்கம் கூறியதாக அறிகிறோம். எனவே அவரவர் அளவு நிலைக்கு மேற்பட்டுப் பொருளைப் பெறுதல் தவறு என அறிகிறோம். அந்த நிலையினை வன்மையாகக் கண்டிக்கும் வள்ளுவர் அதைத் திருடுதல்’ என்றே குறிக்கின்றார். இந்த அளவின் கண் நின்றொழுகும்' ஆற்றலை மக்கள் அனைவரும் பெறின் நாட்டில் பல தொல்லைகள் தீருமன்றோ! வள்ளுவர் இதை ஆற்றல் என்கின்றார்; இதை ஒழுகலாறு எனக் குறிக்கின்றார். எனவே மக்கட் சமுதாயம் தன் உழைப்பு, திறன், உற்ற பொருட்செலவு பிறவற்றின் அடிப்படையில் பெருக்கும் பொருளை அவரவர் உழைப்பு, தகுதி, நிலை முதலியவற்றின் அடிப்படையில் பகிர்ந்து வாழும் ஆற்றலைப் பெறுவராயின், அந்த அளவறிந்த நெஞ்சத்து அறம் பெறுவாராயின் நாட்டில் களவு இல்லை; கதவடைப்பு இல்லை; பிற கொடுமைகளும் இல்லை. இந்த உண்மையினை வள்ளுவர் இங்கே துறவறத் தில் ஏற்றிக் கூறினாராயினும் உலக முழுதுக்கும் இது பொது வாகும். அருளுடையராகி தங்கருமம் செய்யும் தன்மையாள ராக, கூடா ஒழுக்கங்களை நீக்கி எல்லாரும் நல்ல கடமையாம் தவநெறியை மேற்கொண்டு கள்ளாமை போன்ற தீமைகளை நீக்கி நாட்டை நாடாக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. வள்ளுவரை வாழ்த்திப் போற்றும் நாம் அவர் காட்டிய வழி நின்று நாமும் வாழ்ந்து நானிலத்தையும் வாழவைப்போமாக! வாழ்க வள்ளுவர்! வளர்க அவர்தம் அறநெறி!!