பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

சான்றோர் வாக்கு


பயனில சொல்லாமை ஒருவன் இரவில் படுக்கப்போகும் போது, அவன் அன்று செய்த செயல்களையும் பேசிய பேச்சுக்களையும் கோவையாக எண்ணிப் பார்ப்பானேயானால், அவனுக்கு ஓர் உண்மை புலப்படும். அன்றைய செயல்களுள் பல பயனற்றவை என அறிவான். பேச்சில் மிகப்பல பயனற்ற நிலையையும் உணர்வான். எங்கோ ஓரிருவர் இதற்கு விதிவிலக்காகலாம். ஆனால் சமுதாயத்தில் பெரும்பாலோர் இந்நிலையிலேயே உள்ளனர். அந்த நிலையில் அவர்கள் கடந்த கால வாழ்வினை எண்ணிப் பார்ப்பார்களானால், வாழ் நாளில் இவ்வளவும் வீணாயிற்றா என வியப்புறுவர். வள்ளுவர் அவ்வாறு எண்ணி, பயனுள்ளவற்றைப் பேசி, பயனுள்ள செயல் செய்வாரை உணர்வார்’ எனக் காட்டுவர். 'காளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈனும் வாளது உணர்வார் பெறின் என்பது அவர் வாக்கு. இன்றைப் பொழுது இனிமையாய்க் கழிந்தது-எப்படியோ கழிந்தது என எண்ணி மகிழ்வார் பலராதலின் உணர்வார் பெறின் என்றார் என எழுதுவர் உரையாசிரியர்கள். எனவே ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் செயலையும் பேசும் பேச்சினையும் எண்ணி எண்ணிப் பார்த்து வாழ்நாள் கழிவதை எண்ணி, நற்செயல் புரிந்து, நல்லன. பேசி, பயனுள்ள வகையில் காலத்தைக் கழிக்க வேண்டும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்நிலையில் வாழ்வா ராயின் பின் உலகம் எவ்வளவு உயர்ந்து நிற்கும்! - எத்தனையோ அறநெறிகளும் சான்றோர் வாக்குகளும் படித்தும் கேட்டும் மனிதன் திருந்தாத நிலையில் எங்கோ சென்று கொண்டிருக்கிறான் என்பதைத்தானே நாட்டு நடப்பு காட்டுகிறது. இதனால்தான் வள்ளுவர் 'பயனில சொல்லாமை என்றே ஓர் அதிகாரம் அமைத்துள்ளார்.