பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


பயனில சொல்லாமை 61 அவ்வாறு சொல்லுவது சான்றோர் நெறிக்கு-அறநெறிக்கு மாறுபட்ட ஒன்று என அவர் பத்துக் குறட்பாக்களில் விளக்குகிறார். பயனில்லாத சொல்லைச் சொல்லி மகிழ்ந்து தன் நேரத்தினையும் பிறர் நேரத்தினையும் வீணடிப்பவனை மகன் எனவே கூறவேண்டாம்; மனிதன் எனவே மதிக்க வேண்டாம் எனவும் அவனைப் பதருக்குச் சமமாக ஒதுக்க வேண்டும் எனவும் கூறுகின்றார். 'பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல் (196) என்பது அவர் வாக்கு. பெறுதற்கரிய மானுடப் பிறவியினை-ஒளவையார் "அரிதரிது மானுடராதல் அரிது’ என்று கூறியபடி பெற்ற மனிதப் பிறவியினைப் பயனுள்ள செய்து பயனுள்ளன பேசி பயனுள்ளன நினைத்துப் பாதுகாக்க வேண்டாமா முடிந் தால் நல்ல பயனுள்ளவற்றைப் பேசு, நினை, செய்; முடியா விட்டால் பயனற்றன பேசாதே-செய்யாதே-நினையாதே என்ற கருத்தினையே நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஒம்புமின்’ என்ற சங்ககால அடிகள் நமக்கு நினைவுறுத்துகின்றன. வள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே சென்று. “நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று (197) என்கிறார். சான்றோர் எல்லை கடவாதவர்கள். தக்கன செய்பவர்கள். எனினும் தேவை நேரின்-தமக்காக இன்றேனும் சமுதாய வாழ்வுக்காக நயனில சொல்ல நேரினும் நேரிடலாம். ஆனால் அச்சான்றோர் பயனில சொல்லுதல் கூடாது-அறவே கூடாது என்கிறார். எனவே இப்பயனில சொல்லுதலைப் பெரிய மறமாகவன்றோ வள்ளுவர் காட்டு