பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சான்றோர் வாக்கு


62 சான்றோர் வாக்கு கிறார். சான்றோர் இதை எண்ணிப் பார்க்கவும் கூடாது என்பது அவர் கருத்து. மனிதனுடைய வாழ்வு யாவும் எண்ணம், சொல், செயல் என்ற மூன்றிலேயே அடங்குகின்றன. இம்மூன்றும் நல்லன. வாக-பயன் உள்ளனவாக-மெய்உடையனவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே, நம் முன்னோர்கள் ஆய்ந்து, அறிந்து, உற்று, உணர்ந்து உள்மெய்-வாய்மெய்மெய்ம்மெய் (உண்மை, வாய்மை, மெய்ம்மை) என மூன்று சொற்களைக் கண்டு வைத்தார்கள். வடமொழிவாணர் இதையே 'திரி கரண சுத்தி' என்பர். எனவே எவ்விடத்தும் எந்நிலையிலும் பயனுள்ள நல்லனவற்றையே பேச வேண்டும். எனவே மனிதராகப் பிறந்த நாம் நாடு வாழ, நானிலம் வாழ, சமுதாயம் வாழ, வையம் இன்பில் திளைக்க இச்சான்றோர் காட்டிய வழியினைப் பின்பற்றக் கடமைப் பட்டிருக்கிறோம். வள்ளுவர் காலத்திலிருந்தே-ஏன்அதற்கு முன்பிருந்தே சான்றோர்கள் இந்த இன்றியமை யாத-அடிப்படையான உண்மையினை வற்புறுத்தி வந்துள் ளனர். ஆனால், பனிதன் மனிதனாகத் திருந்தவில்லையே. ஆறறிவு பெற்றவர்களாகிய நாம் மக்கட் பதடி' யாகாது மனிதனாக வாழ, இந்தச் சாதாரணமான-அடிப்படை உண்மையை உணர்ந்தால் உய்தி உண்டு. இது கடினமானது மன்று. சான்றோர் இதைச்செய் அதைச்செய் என்று எதையும் வற்புறுத்தவில்லை. பயனில சொல் பேசாதே என்று தான் சான்றோர் சொல்லுகிறார்கள். இந்த எளிய செயலை மேற்கொள்ள முடியாதா! முயலலாம். முயன்றால் வெற்றி பெறலாம். வெற்றி பெற்றால் வையம் வாழும்வளம் பெருகும்-முயல்வோமாக!