பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


புறங்கூறாமை தேவர்கள் இமையாக் கண்களை உடையவர்கள். "இமையா நாடு' என்றே அவர்கள் நாட்டுக்குப் பெயர். அதற்குக் காரணங்கள் புராண மரபில் எத்தனையோ இருக் கலாம். ஆனாலும் தமிழ்ப் புலவர் அதற்கு ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடித்தார். - 'முன்னின்று ஒருவர் முகத்தினும் வாயினும் கல்கின்று உருகக் கலந்துரைத்து-பின்னின்று இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர் விழித்திரையோ கின்ற நிலை’ என்பது அவர் வாக்கு. ஆம்! உலகில் மக்கள் ஒருவரை முன் நிறுத்தி இந்திரனே சந்திரனே வீரனே குரனே எனப் பல வாறு புகழ்ந்து பேசிவிட்டு அவன் அப்பால் சென்றதும் அவனைப் பழித்துரைப்பதைக் காண்கிறோமல்லவா! அவ்வாறு பேசுபவர்களை இழிவுபடுத்தும் வகையில் "சான்றோர்’ என்கிறார் புலவர். சான்றாண்மை மிக்க பண்பாளர் கொளக் கருதாத கொடிய இச்செயலைச் செய்ப வரை இழித்துரைக்கும் சான்றோர்’ என இழிவுபடுத்து கிறார். ஒன்றும் தெரியாதவனை அவன் மகாமேதாவி என்று மட்டம் தட்டும் மரபு நாட்டில் உண்டல்லவா! அதுபோல! தேவர்கள் இமையா நிலைக்கு இவர் காட்டும் காரண மாக வைத்து முன்னொன்றும் புறமொன்றும் பேசுவார் நிலையினையே புலவர் சுட்டுகிறார். ஆம்! தேவர்கள் இமைத் தால் அந்த இமைப்பொழுதில் இக்கயவர்கள் என்னென்ன பேசுவார்களோ எனக் கருதியே இமையாது-கண்கொட் டாது-மிக விழிப்பாக உள்ளனர் என்கிறார். இதனால் புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழும் மாக்களின் மதியற்ற செயலைப் புலவர் நன்கு புலப்படுத்தி விட்டார். வள்ளுவர் இக்கொடுமையினை விளக்கவே புறம் கூறாமை என்ற ஒர் அதிகாரமே அமைத்து, பத்துக் குறட்பாக்களில் அதன் கொடுமையினை நன்கு எடுத்துக் காட்டுகிறார்.