பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

சான்றோர் வாக்கு


'64 சான்றோர் வாக்கு புறங்கூறி வாழ்பவன் வாழ்வதைக் காட்டிலும் அவன் இறப்பதே மேல் என்பது அவர் கருத்து. அதுவே அறம் காட்டும் நலமெலாம் தரும் என்கிறார். r 'புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலில் சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்’ (183) என்பது அவர் வாக்கு. இதற்கு உரை கூற வந்த பரிமேலழகர் பிறரைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியவனாகப் பொய்த்து ஒருவன் உயிர் வாழ்தலின் அது செய்யாது சாதல், அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்' என்று கூறுவர். ஆயினும், அறநூல் தரும் ஆக்கம் அவனுக்கு மட்டுமன்றி, உலகுக்கே அந்த ஆக்கம் பொருந்துவதாகும். ஆம்! அத்தகைய பொய்மையாளரை இல்லாத நாடு நலம் பெறுமல்லவா! இதனால் வள்ளுவர் வாழ்வாங்கு வாழும் மக்களினத்துக்கு இவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவழி காட்டுகிறார். இத்தகைய கயவர்கள் பின் எத்தகைய துன்பமும் இழைக்கும் ஒன்னலராவர் என்பது தெளிவு. இவர்கள் முன்னே தொழுவர்; பின்னே உயிர் மாய்க்கவும் அஞ்சமாட்டார்கள். இதைக் கருதித்தான் போலும் பின்மற்றோரிடத்தில் தொழுதகையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண் aரும் அனைத்து என்கிறார். எனவே மக்கள் இத்தகைய புறங்கூற்றாளரைக் கண்டறிந்து விலகக் கடமைப்பட்ட வராவர். ஒருவன் வேண்டாதவனாயின் அவனை முன்னே வைத்து எவ்வளவு பழித்துரைத்தாலும் தவறில்லை. அவன் தன் னிலும் மாறுபட்டவன் என அறிந்து, அவனும் எச்சரிக்கை யாக இருப்பதோடு மாறுபட்டவன் இப்படித்தானே இருப் பான் என்று அமைதியும் கொள்வான். ஆனால் மாறாக முன் ஒன்றும் பின் ஒன்றும் பேசுபவனானால் அவனை எவ்வாறு மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியும் வள்ளுவர் இதனையே,