பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


புறங்கூறாமை 65 கண்கின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்கின்று பின் நோக்காச் சொல்’ (184) என்கிறார். இவ்வாறு முன் பின்னாக நினைத்து-பேசி-செய லாற்றும் நிலையில்தான் இன்று மனித சமுதாயம் செல்லு கின்றது. பிற உயிரினங்களுக்கு இத்தகைய கொடுநிலைகள் இல்லை எனலாம். இந்தக் கொடுமையைப் போக்க வழி இல்லையா! ஏன் இல்லை வள்ளுவரே இதற்கு வழி காட்டுகிறார். புறங்கூறா மையின் கடைசிக் குறளில் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்க்குமே இக்கொடுமை நீங்கின் தீதில்லை என்கின்றார். அதற்கு அவர் காட்டும் வழி ஒன்றே. தம்பி! பிறரைப் பின் நின்று குற்றம் கூறுகின்றாயே! சற்றுநில்; நினைத்துப்பார்! நீ செய்த குற்றங்களை நினை. அப்போது நீ செய்யும் தவறு உனக்குத் தெரியும். உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தை எண்ணாது மற்றவன் கண்ணில் இருக்கும் துரும்பைப் பற்றிக் குறை கூறுகிறாயே; தெரிந்து தெளிவாய். தெரிந்த பின் இப்புறங்கூறும் புன்மை உன்னை விட்டு ஒழியும், உயிர்களும் தீமையற்று வாழும் என்கிறார். ஆம்! தீமை அற்ற மனிதன் ஒருவருமில்லை. எனவே தன் பிழை நினைப்பின்-தன் தவறு களை உணரின், பிறரைப் பழிகூற-புறங்கூற நினைக்க முடியாது. - "ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு' (190) என்ற குறளை நாம் வாழ்விடைக் கொண்டு வழுவாது நடப்போமாயின் நிலை பெற்ற உயிர்களுக்கு நிலைத்த இன்பமே கொழிக்கும் என்பது உறுதி. எனவே நாம் வள்ளுவர் வாய்மொழி வழி ஒழுகி வையத்தை வாழ வைக்க முயல்வோ மாக!