பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சான்றோர் வாக்கு


சுற்றம் பேணுதல் வள்ளுவர் வையம் வாழ வழிகாட்டியர்! மனிதன் மனிதனாக வழி வகுத்தவர். அவர் வகுத்த அறிவியலுரம் வாழ்வியலும் மக்களால் கைக் கொள்ளப் பெறத் தக்கன, அவற்றுள் ஒன்றே சுற்றம் பேணுதல்', சுற்றம் பேணுதல் என்ற இரு சொற்களையும் வள்ளுவர் எடுத்தாண்டுள்ளார். சுற்றம் தழால்’ என்ற ஓர் அதிகாரமும் குறளில் உள்ளது. இந்த அதிகாரம் வைப்பு முறையில் அரசியலோடு சார்த்தப் பெற்றுள்ளது. (53). இதில் கூறப் பெறும் கருத்துக்கள்யாவும் அரசர்களுக்கும் அரசியல் தலைவர் களுக்கும் மட்டும் பொருந்துவன என எண்ணலாகாது. வள்ளுவர் நல்ல அறநெறிகளைச் சிறப்பாக ஒருவரை முன் னிறுத்திக் கூறி அவர் வழியே அந்த நெறியை உலகச் சமுதா யத்துக்கு உரிமையாக்க நினைக்கின்றவர். எனவே வள்ளுவர். காட்டும் அறவாழ்வு-அதிகார முறையிலும் இயல் முறை யிலும் ஒருவகையாருக்கு உரியதாகப் பகுக்கப்பெறினும்அது மக்கள் சமுதாயம் அனைத்துக்குமே ஏற்புடைத்து எனக் கொள்ளல் வேண்டும். சுற்றம் என்ற சொல்லினை வள்ளுவர் இந்த அரசியல் அதிகாரத்தில் மட்டும் எடுத்தாளவில்லை. மேலும் சுற்றத் தைக் குறிக்க வேறு பல சொற்களையும் பலவிடங்களில் பயன் படுத்துகிறார். ஒக்கல் (43) கேளிர் (187-615) போன்ற சொற் களையும் அவர் எடுத்தாளுகிறார். இவற்றின் அடிப்படை அனைத்தும் ஒருவரை ஒருவர் சூழ்ந்து நின்று. ஒருவருக் கொருவர் உற்றுழி உதவி, உதட்டால் அன்றி உளத்தால் அன்புபூண்டு வாழும் தூய்மை நெறியினை உணர்த்தவே அமைகின்றன. சுற்றமாச் சுற்றும் உலகு (1025) என்ற குடி செயல்வகை என்ற அதிகாரத்தில் சூழ்ந்து கொள்ளப்படும்’ என்ற பொருளில் சுற்றும் என்ற சொல்லைக் குறிக்கிறார்,