பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


சுற்றம் பேணுதல் '67 எனவே நம்மைச் சூழ்ந்து உற்றுழி உதவும் தக்காரே சுற்றமா வர் என்பது வள்ளுவர் கருத்தாக அமைகின்றது. வெறும் பிறப்பால் மட்டுமின்றி, செயல்வகையால்-உளம் ஒத்து வாழும் வகையால்-குற்றமற்ற இணக்கத்தால் சுற்றம். அமையும் என்பது வள்ளுவர் கருத்து. இந்த உண்மை யினையே எல்லாச்சமயங்களும் உலகப் பேரிலக்கியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. பேணுதல்’ என்ற சொல் உயர்ந்த நிலையில் போற்றப் பெறுவது. வள்ளுவர் இச் சொல்லை, விரும்பிக் கொள்ளப் படும்' என்ற பொருளில் பகைமாட்சி என்னும் அதிகாரத்தில் பேணப்படும் (866) எனக் கொள்ளுகிறார். மேலும் விரும் பாதவரைப் பேணலர் (1016) என்றும், இகழும் நிலையினைப் பேணா (924) என்றும், விரும்பாமையைப் பேணாது' என்றும் (163, 902,1178) பகைமையைப் பேணாமை (866) என்றும், அவமதித்தலைப் பேணாது (892, 1283) என்றும் பல பொருள்களில் குறிக்கிறார். அனைத்தின் அடிப்படை களும் உளத்தால் ஒட்டா ஒன்றினையே குறிப்பதை அறிய' லாம். பொருளைப் பொதிந்து போற்றலைப் பேணுதல்' என்பது உலகவழக்கு. சுற்றமும் அவ்வாறு பேணத்தக்கதே. இடையில் தோன்றும் இன்னல்களோ, இணக்கமற்ற செயல் களோ, பிறகுழ்ச்சிகளோ, பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலியனவோ இச்சுற்ற உணர்வை அசைக்காது காத்தல் வேண்டும். அதனாலேயே "பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள’ என அச்சுற்றத்தின் உயர்வினை, உள’ என்னும் பன்மை வினையால் உயர்ததிக் காட்டித் தம் 'சுற்றம் தழால்’ என்ற அதிகாரத்தைத் தொடங்குகிறார், வாழ்விலும் தாழ்விலும் இன்பிலும் துன்பிலும், இணைந்து, உளம் வேறுபடாது ஒன்றிக் கலந்து உறவாடும்.