பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


சுற்றம் பேணுதல் 69 இனி, செல்வம் பெற்ற மக்களுள் சிலரும் பழைமையை மறப்பது உண்டு அன்றோ அதையும் தவறு எனக் காட்டுவர் வள்ளுவர். செல்வத்துப் பயனே சுற்றம் தழுவல் என்பது வள்ளுவர் உள்ளக் கிடக்கை. இன்று நாட்டில் உள்ள செல்வர் அனைவரும் தத்தம் சுற்றத்தாரைத் தழுவி, அவர் தம் முகம் நோக்கி, அவர்தம் வாழ்வினையும் மலர வைப்பார் களாயின் நாட்டில் எத்தகைய கொடுமையும் இல்லையாகுமே. 'சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன் (524) என்ற குறளில் சுற்றப்பட ஒழுகல் என்ற ஒழுகலாற்றை வற்புறுத்துகின்றார் அவர். செல்வம் பெற்ற ஒருவன் கண்டும் காணாது கேட்டும் கேளாது வாழும் அவல வாழ்வு வையத்தை வாட வைப்பதாகும். உலகினை உண்பிக்கவே தமக்குச் செல்வம் வந்துள்ளது என எண்ணி எல்லாருக்கும் கொடுக்கும் உயர் பண்பு போற்றற்குரியது. அந்த நிலையில் இன்றேனும் ஒவ்வொரு செல்வரும் தத்தம் சுற்றத்தாரையாயினும் ஒம்புவராயின் அதுவே வையவாழ்வை வளமுடையதாக்கும் என உணர்த்துகிறார் வள்ளுவர். மேலும், அச்சுற்றத்தாரை, செல்வர்கள் ஓம்பின் அவர் தம் செல்வமே அதிகமாக வளரும் நிலையினைப் பெறுவர் என்பதையும் வள்ளுவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அதற்குக் காக்கையைத் துணைக்கு அழைக்கிறார். யாரோ இட்ட சோறு தன் கால் வயிற்றுக்கும் காணா நிலையிலும், 'கா, கா, கா, எனக் கரைந்து பிறகாக்கைகளையும் கூவி அழைத்துக் கூடி உண்பதைக் காணும் மனிதன், ஏனோ அந்த உணர்வைத்தான் பெறவில்லையே என நைகின்றது அவர் நல்ல உள்ளம். அதே வேளையில், அப்பண்பால், அவ்வாறு இறைக்கும் கிணறாகிய அந்தச் செல்வக் கொடையாளி மேலும் மேலும் செல்வம் சுரக்கப்பெற்று வாழ்வான் என்ற உண்மையினையும் அவர் சுட்டுகிறார். காக்கை கரவா கரைந்துண்னும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள (527)