பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

சான்றோர் வாக்கு


70 சான்றோர் வாக்கு என்று ஈண்டும் உள' என்னும் பன்மைவினையின் வழியே கரவாவழிப் பெருகும் செல்வங்களையெல்லாம் குறிக் கின்றார். எனவே சுற்றம்பேணுதல்' என்ற உயர் ஒழுக்கமே யாவருக்கும் இன்றியமையாது வேண்டப்படுவதென்பதும் அதிலும் சிறப்பாக உயர்மட்டத்தில் வாழ்வாருக்கும் செல்வ்ருக்கும் இது அவசியம் வேண்டப்படுவது என்பதும் தேற்றம். இந்த அதிகாரத்தை வள்ளுவர் அரசியலோடு ஏன் சார்த்தினார்? அல்லது பிறரால் ஏன் சார்த்தப் பெற்றது? செல்வத்தில் உயர்ந்தவன் அரசன். அன்றி அரசியல் நிலையில் உயர்மட்டத்தில் உள்ளவர்கள். அவர்கள் மனம் வைத்தால் நாட்டில் நலம் பல பெருகும். சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பிற உயர் அலுவலர்களும் இந்த அடிப்படை யிலே, பிறப்பால் வரும் சுற்றத்தைமட்டுமன்றி, வையமாகிய சுற்றத்தையே தழுவிச் செல்வார்களாயின் நாடு நாடாகும். முன்னரே கண்டபடி சுற்றம் பிறப்பால் வருவதன்று. அதிலும் அரசருக்கோ அன்றி அரசியல் தலைவர்களுக்கோ அவர்தம் ஆணையின் கீழ்ப்பட்ட நாட்டில் உள்ள அனை வரும்-அனைத்தும் சுற்றமேயாம். அவர்களுக்கும் "உற்றார் மற்றார் என்ற வேறுபாடு கூடாது. அவர்கள் அனைவரையும் சுற்றமாக ஒம்பி நல்லது ஆற்ற வேண்டும் என்று வாழ்வின் உயர்மட்டத்தில் உள்ளாரை மேல்வரிச் சட்டமாகக் காட்டி, வள்ளுவர், வையத்துள் வாழும் ஒவ்வொருவரும் சுற்றம் பேண வேண்டிய இன்றியமையா வாழ்க்கை நெறியை வற்புறுத்து கின்றார். இனி அவர் வழியே இச்சுற்றம் பேணும் நெறியின் இலக்கிய மரபினை எண்ணிக் காணலாம். 'காக்கை குருவி எங்கள் சாதி. நீர் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' எனப் பரந்த பார்வையில் தன் சுற்றத்தை எங்கும். கண்டான் பாரதி. நல்ல உள்ளம்-பண்புட்ட