பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


சுற்றம் பேணுதல் 7 | உள்ளம்-பரந்த உள்ளம் இவ்வாறு உலகெங்கனுங் வாழும் உயிரினத்தைத் தன் சுற்றமாகக் கொள்ளும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சங்ககாலப் புலவன் தன் பரந்த உள்ளத்தைக் காட்டவில்லையா! கேளிர் என்ற சொல்லை வள்ளுவர், நண்பர், சுற்றத்தார் (187, 615) என்ற பொருளி லும் காதலர் (1267) என்ற பொருளிலும் கையாளுகிறார். எனவே வாழ்விடை வள்ளுவர் காண நினைத்த சுற்றத்தின் எல்லை பரந்த ஒன்று. வாடிய முல்லைக்குத் தேர்கொடுத்தான் பாரி எனக் காண்கிறோம். வருந்திய மயிலுக்குப் போர்வை கொடுத் தான் பேகன் எனப் படிக்கிறோம். இவையெல்லாம் சுற்றத்தின் எல்லையைக் குறிப்பனவே. ஆறறிவு படைத்த மனித மனம் எவ்வுயிரும் தன்னுயிராகக் கருதும் தன்மையில் வாழ்ந்தால் வையம் வாழ்வு பெறும். அதனாலேயே வள்ளுவர் சுற்றம் தழுவி வாழ வேண்டிய நிலைக்கு, நாம் முன்னரே கண்டபடி காக்கையை எடுத்துக் காட்டி விளக்கு கிறார். உவமை இலக்கணப்படி, தொல்காப்பியர் நெறியில், உவமானமாகவரும் பொருள் உயர்ந்த தன்றோ எனவே தான், சுற்றம் பேணாத மனிதனைக் காட்டிலும் சுற்றம் பேணும் காக்கை மேல் என்று காட்டி, அத்தகைய சுற்றம் பேணும் நல்லவனை எல்லாச் செல்வமும் வையத்து வந்தடை யும் என வாழ்வியலையும் சுட்டுகிறார். - சுற்றம் பிறப்பால் வருவதன்று; எச்சமயத்தோர் சொல்லும் இதுவே. ஒருவனின் அயலவனைச் சுட்டிக்காட்ட நினைத்த இயேசு பெருமான் தந்த விளக்கம் இங்கே நினைவு கூர்தற்குரியதன்றோ! 'உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும், அம்மருந்து போல்வரும் உண்டு’ என்ற மூதாட்டியின் வாக்கு முன்னிற்கின்றதே! இவ்வாறு 'பிறப்பால் அன்றி, உணர்வால்-பண்பால்-உயர் நோக்கத்