பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சான்றோர் வாக்கு


72 சான்றோர் வாக்கு தால் காணும் பரந்துபட்ட சுற்றத்தாரைப் போற்றிப் புரத்தலே வைய வாழ்வாகும். இந்த உண்மையினைக் கம்பர், கடவுளை மனிதனாகக் காட்டி, மனிதன் வாழ வேண்டிய பண்பினைக் காட்டும் முகத்தான் நன்கு விளக்குகிறாரன்றோ. இராமன் தந்தை சொல் தட்டா நிலையில் காடு செல்கிறான். அங்கே அவனுக்குப் புதுப்புதுச் சுற்றத்தார் சேர்கின்றனர். கங்கை இருகரையுடைய குகன் அவனுக்குச் சுற்றமாகின்றான் - உடன்பிறப்பாளனாகின்றான். முன் புளம் ஒருநால்வேம் முடிவுளதென உன்னா அன்புள. இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் என்று இராமனையே பேசவைக்கிறார் கம்பர். எங்கோபிறந்த வனவேடுவன் அரச குமாரனாகிய இராமனுக்குச் சுற்றமாகிறான். அடுத்து, மனித இனத்தினும் மாறுபட்ட குரங்கினத்தைச் சார்ந்த விலங்காகிய சுக்கிரீவன் சுற்றமாகிறான். பின், குணத்தால் வேறுபட்ட, மாற்றான். எனவே அனைவரும் மதித்த வீடணன் சுற்றமாகிறான். தசரதனை அவர்கள் தந்தை யாகவே இராமன் வாக்கில் காட்டுகிறார் கம்பர். 'குகனோடும் ஐவரானோம் முன்புபின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின்வந்த அகமனர் காதல் ஐய! நின்னொடும் எழுவரானோம் புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிங்தான் உங்தை' என்று தான் காடுவந்தமையின் சுற்றம் வளர்ந்ததை எண்ணி மகிழ்கின்றான் இராமன். அப்படியே சடாயு எனும் பறவை யினைச் சுற்றமாகக்கொண்டு அதன் இறுதிச் சடங்கை யெல்லாம் தானே மகனெனச் செய்து முடிக்கிறான். இவ்வாறு கம்பர் மட்டுமன்றி உலகம் வாழ இலக்கியம் கண்ட அனைவரும் சுற்றத்தின் பரந்த எல்லையினையும் அதைப் பேண வேண்டிய வாழ்வின் இன்றியமையா நெறியை யும் வள்ளுவர்தம் இலக்கண மரபுக்கு இலக்கியங்களாகக்