பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


உழவு - 73 காட்டிச் செல்லுகின்றனர். எனவே உலகத்தை வாழ வைக்க நினைத்த வள்ளுவர் 'உலக உயிர்களையே சுற்றமாப்பேனும்: உயர்நிலையை உணர்த்தி அதன்வழி நம்மையெல்லாம். ஆற்றுப்படுத்துகின்றார். எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி இரங்கவும் நீ தெய்வ அருட் கருணை செய்யாய் பராபரமே என்று தாயுமானவர் இறைவனை வேண்டியபடி, வள்ளுவர் காட்டும் வாழ்வைப் பின்பற்றும் நாம், பரந்த சுற்றத்தினைப் பண்புடன் பேணி வாழின் வையம் வளம் பெறும். அத்தகைய நல்ல பண்பு நாட்டிலும் உலகிலும் மலர்வதாக' உழவு. ‘ஏர்' என்ற சொல் தமிழில் சிறந்த பொருள்களைத் தருகின்றது. இது அழகு, தோற்றப்பொலிவு, எழுச்சி, நன்மை முதலிய பல பொருள்களைத் தருவதோடு, கலப்Hை என்ற பொருளையும் அக்கலப்பையால் செய்யப்பெறும் உழவுத் தொழிலையும் குறிக்கிறது. அப்படியே உழவைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகிய வேளாண்மை என்பதும் கொடை, உபகாரம், சத்தியம் போன்ற பொருள்களில் தமிழில் வழங்குவதைக் காண்கிறோம். எனவே, இவ்வுழவுத் தொழில் ஏரால் நடைபெறுகின்றதென்பதும் அது நாட்டுக்கு அழகினையும் தொழிற் பொலிவினையும் நல்கி நலம் பெற்று மக்கள் எழுச்சியுற உதவுகின்றதென்பதும் அத்தொழில் மற்றவர்களுக்கு உபகாரம் செய்யும் கொடைத் தன்மை உடையதாய வாய்ப்பைத் தவறாது நிற்கச் செய்யப்பெறுவ தென்பதும் நன்கு தெளிவாகின்றது. ஆம்! உலகம் நேரிய வழியில் எழுச்சி பெற்று நலமுற்று வாழ வேண்டுமாயின் зет-5