பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

சான்றோர் வாக்கு


74 சான்றோர் வாக்கு அவ்வுலகு இவ்வுழவுத் தொழிலைப் போற்றக் கடமை பெற்றுள்ளது என்பது அன்றும் இன்றும் என்றும் தெளிவாக விளங்குகின்ற உண்மையாகும். அதனாலேயே வள்ளுவர் "சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம். அதனால் உழன்றும் உழவே தலை’ என்ற குறள் வழியே தன் உழவு என்னும் அதிகாரத்தை உலகின் முன் வைக்கிறார். உலகில் வாழும் மனிதன் மட்டுமன்றி எல்லா உயிர்களுமே ஏதேனும் ஒன்றை உண்டே உயிர்வாழ வேண்டியுள்ளது. ஓரறிவுயிராகிய மரம் முதலியன கூட அவற்றிற்கென அமைந்த உணவில்லையாயின் வாழாது பட்டு உலர்வதைக் காண் கிறோம், எனவே உணவு வாழ்வுக்கு இன்றியமையாதது. 'உண்டி முதற்றே உணவின் பிண்டம் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்: என்பன போன்ற தமிழ்த் தொடர்கள் பண்டு தொட்டே வழக்கத்தில் உள்ளன. யார் எந்தத் தொழிலைச் செய்தாலும் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்கள் உணவு இன்றி வாழ்தல் இல்லை, அந்த உயிர் ஒம்பும் உணவைத் தருவது தான் உழவுத் தொழில். எனவே, உலகம் அத்தொழிலுக்கு ஆக்கமாகிய ஏரின்பின் சுற்றுவது என வள்ளுவர் கூறுவது எவ்வளவு பொருத்தமாகின்றது. ஆம்! இந்த நிலையினை உணர்ந்துதான் இவ்வுழவுத் தொழிலினைத் தலையாய தொழில் எனக் காட்டுகிறார் அவர். ஆற்றங்கரையின் மரமும், அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றேஏற்றம்-உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர், பழுதுண்டுவேறோர் பணிக்கு என ஒளவையாரும் உழவின் ஏற்றத்தைப் பாடிச் சென்றார். அவ்வுழவின் திறனையும் செயலையும் வையம் வாழ வள்ளுவர் வகுத்துரைக்கின்றார். உழவுத் தொழில் செய்வது கடினம். வெயிலிலும் மழையிலும் பட்டுழன்று பாடுபட வேண்டும். நிழலில் மின்