பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


உழவு 75 ஒளியிலும் காற்றிலும் இருந்து பணி செய்வதன்று இது. எனவே பலர் உழவு என்றாலே அஞ்சி ஓடுகின்றனர். ஆனால், நிலத்தில் உழுதுபயிர் செய்யும் உழவர்களோ பொறுமை யோடு எல்லா இன்னல்களையும் ஏற்றுப் பாடுபட்டு விளைத்துத் தாமும் உண்பதோடு, அவ்வுழவுக்கு ஆற்றாது ஒடுகின்றவர்களுக்கும் உணவு இட்டு உலகையே உண்பிக்கும் தாயின் நிலையில் வாழ்கின்றனர். மேலும் உழவர் யாருக்கும் அடிமையாகாது அரசர்போல் வாழ்ந்து நிற்க, மற்றவர் யாருக் கேனும் அடிமைப்பட்டு அவர்தம் சொல்லுக்கு அஞ்சி வாழ வேண்டியவர்தாம் என்ற உண்மையினை வள்ளுவர், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழு துண்டுபின் செல்பவர்' எனக் காட்டுகிறார். இதில் மற்றவர் களை மக்களாகவே காட்டாது அஃறிணைக் குறிப்பால் "மற்றெல்லாம். எனவே சுட்டுகிறார். மேலும் பிறரைத் தொழுவதோடு மட்டுமன்றி அவர்கள் இவ்வுழவாளியையும் தொழ வேண்டியவர்கள் என்ற உண்மையினையும் உணர்த்து கிறார். v. மேலும் இவ்வுழவர் என்றென்றும் பிறரிடம் கை நீட்டி எதையும் இரவாது வாழும் உயர் நிலையில் உள்ளவர் என்பதையும் தம்மிடம் வந்து இரப்பவர்க்கு இல்லை யென்னாது ஈயும் வேளாண்மை மிக்கவர் என்பதையும் வள்ளுவர் காட்டத்தவறவில்லை. இரவார் இரப்பார்க் கொன்றிவர் கரவாது கை செய்துரண் மாலையவர்' என்பது அவர் வாக்கு. - இவ்வாறு யாரையும் தொழும் அடிமை இல்லாதவராய் இரவாது, இரப்பார்க்கு ஈந்து வாழும் உழவர் தனி வாழ்வில் மட்டுமன்றிச் சமுதாய வாழ்விலும் ஆட்சி நெறியிலும் உயரிடம் பெற்றவர் என்பதையும் நாம் உணர வேண்டும். நாளை அதுபற்றிக் காண்போம்.