பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சான்றோர் வாக்கு


76 சான்றோர் வாக்கு நாடாளும் மன்னனை வாழ்த்த நினைத்த ஒளவையார் வரப் புயர' என வாழ்த்தினார். ஆம்! ஊர் தோறும் வரப்பு உயர்ந்து நீர்தங்கி நெல்லும் பிறதானியங்களும் விளைந்தால் தான் நாடு நாடாகும். அதனாலேயே அன்று உழவராம் வேளாளர் அரசருக்கு முடிசூட்டும் அரும் செயலைச் செய்தனர். அரசன் வாழ வேண்டுமாயின் கி.ழவுத் தொழில் சிறக்க வேண்டும். இந்த நியதி முடியாட்சிக்கு மட்டுமன்றி குடியாட்சிக்கும் பொருந்துவதாகும். அதனாலேயே இன்றைய பாரதப் பிரதமர் தம்முதல் வானொலிப் பேச்சில் கிராமங் களின் வளர்ச்சியைப் பற்றியும் அக்கிரா மங்களின் உழவு, அதைச் சார்ந்த சிறு தொழில்களின் வளர்ச்சியைப் பற்றியும் கூறி அவையே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப் படை என வற்புறுத்தினார் (Huidய 5.4-77). வள்ளுவர் இந்த உண்மையினைத் தெள்ளத் தெளியக் காட்டுகிறார். உழவுத் தொழில் செம்மையாக நடைபெற்றால்தான் நாட்டில் யாவரும் தமக்கு வேண்டிய உணவினைப் பெற்று, தத்தம் தொழில்களைக் குறைவின்றிச் செய்து உயரமுடியும். எத்துணைச் செல்வம் பெற்றவரும் உணவு இல்லையாயின் என் செய்வர்? அப்படியே எல்லாவற்றையும் துறந்து வாழ் கின்றோம் என்ற துறவியருக்கும் உணவின்றி உய்வில்லை. பாரனைத்தும் பொய்யெனவே துறந்த பட்டினத்தடிகள் போன்ற பலர் உணவினைப்பற்றி எண்ணி ஊரெலாம் அட்ட சோறு நம்மதே என உணர்ந்து பாடுகின்றனர் அன்றோ! எனவே நாடாளும் மன்னனாயினும் மற்றவராயினும் காடு நடந்து கடுந்தவம் புரிவராயினும் இவ்வுழவின்பின் நின்று, இவ்வுழவர் தரும் உணவுக்குக் காத்திருக்க வேண்டியவரே யாவர். எனவேதான் இளங்கோவடிகள் இவ்வுழவரை, இப் போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப் போர் எனக் காட்டுகிறார். வள்ளுவர் இந்த உண்மைகளை யெல்லாம் உள்ளடக்கி, உழவினார் கைமடங்கின் இல்லை.