பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


'உழவு 77 விழைவது உம் விட்டே மென்பார்க்கும் நிலை எனக் கூறிச் சென்றார். விழைவது உம்' என்பதற்கு யாவரும் விழையும் உணவு எனப் பரிமேலழகர் உரை கூறினும் இதற்கு இதனினும் மேலாய பொருள் கொள்ள வேண்டியுள்ளது. பேரின்ப வாழ்வு விழையும் பெருநிலை தொடங்கி-அரசியல் வாழ்வு விழையும் உயர்நிலை தொடங்கி-சமுதாயத்தில் வாழும் மக்களுக்கு-ஏன்?-உயிர்களுக்கு உண்டாகும் எல்லா விழைவு களுமே இதனால் கொள்ளப் பெறவேண்டும். உணவு இல்லை யாயின் உடல் தளரும்-தளரு நிலையில் தழைக்கும் உணர்வு எங்கே? எனவேதான் வள்ளுவர் உலகவிழைவு அனைத்துக்கும் சமுதாய இன்ப வாழ்வு அனைத்துக்கும் உழவே அடிப்படை எனக் காட்டுகின்றார்; அத்துடன் முற்றத்துறந்தார்க்கும் அவ்வுழவரே கதி எனச் சுட்டுகிறார். எனவே உழவின்றி உலகில்லையாம். வள்ளுவர் இதனினும் மேலாக அரசியல் நுணுக்கம் ஒன்றினையும் கட்டிக் காட்டத் தவறவில்லை. நாட்டில் உழவு சிறந்து உணவு மிகுந்து மக்கள் வேண்டிய தேவைகளைப் பெற்று வாழ வழிவகை செய்யும் எந்த அரசாங்கமும் நிலை பெற்றுவாழும் என்பது வரலாறு கண்ட உண்மை. குடியரசா யினும் முடியரசாயினும் இந்த உண்மையினை உணர்ந்து, உணவு உற்பத்தியைப் பெருக்கி, உழவினை உயர்த்தாவிடில் அந்த அரசுக்கு முடிவு என்பதே பொருள். வள்ளுவர் இதனினும் மேலொரு படி சென்று, நாட்டில் நல்ல உணவு விளைக்கும் உழவுத் தொழிலை ஒம்பும் அரசின் கீழ் உலகத்துப் பிற அரசுகளெல்லாம் வந்து அமையும் எனச் சுட்டுகிறார். நமக்கு உணவு அளித்ததன் மூலம் சில மேலை நாட்டு அரசுகள் பிறவகையில் ஆதிக்கம் செலுத்த முயன்றதை உலகு அறியுமே! இந்த நெறியில் இன்றேனும், உண்மையின் உழவு சிறந்து உணவு பெருகும் ஒருநாட்டு வளம் சிறக்க, பிற நாடுக ளெல்லாம். நாடி வந்து நலம் பெறும் வகையில் அந்நாடு