பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சான்றோர் வாக்கு


78 சான்றோர் வாக்கு அமையும் என்றார் வள்ளுவர். பலகுடை நீழலும் தங் குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழலவர் என்பது அவர் வாக்கு. ஆம்! தம் நாட்டு வளர்ச்சி மட்டுமன்றி உலகச் சமுதாய வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வழிகோலுவது இவ்வுழவேயாகும். இந்தக் குறளின்வழி, அலகுடை நீழல்' என்றதால் உழவால் விளையும் பயிரின் நிலையினையும் அதன் வளர்ச்சியையும் வளத்தையும் காட்டி, அந்த நல்ல நீழலில் வையம் வாழும் வகையினையும் வள்ளுவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. மேலும் இத்தகைய உயரிய உழவினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவ்வுழவருக்கும் நிலத்துக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதையும் வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். அவை பற்றி நாளை காண்போம். X X X X X நாட்டில் பல விவசாயிகள் பாடுபட்டும் போதுமான பலன் இல்லை என வருந்துகின்றனர். காரணம் அவர்கள் வள்ளுவர் காட்டிய வழியைப் பின்பற்றாமையே. வள்ளுவர் சிறந்த அரசியல் அறிஞராவதோடு நல்ல உழவராகவும் இருந் திருக்க வேண்டும்; உழவின் நுணுக்கங்களை அவர் உணர்த்து கிறார். முதலில் நிலத்தை நன்கு உழவேண்டும்-பொடியாக்கி உழவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு உழவு சிறக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு விளையுள் பெருகும். இதைத்தான் வள்ளுவர் தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்’ என்கின்றார். நல்ல உழவு இருப்பின் எருவும் வேண்ட்ாம் என்பது அவர் கருத்து. உழவுக்கு மாடு இல்லை என்பாருக்கும் உழுங்காலத்து ஊர் சுற்றுவாருக்கும் யாரோ உழ எப்படியோ விவசாயம் செய் வாருக்கும் வள்ளுவர் இம்முதல் பாடத்தைக் கற்றுத் தருகிறார். உழவின் அடிப்படையே ஏர் உழுதலில்தான் உள்ளது.