பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


உழவு 79 அடுத்து அவர் காட்டுவது எரு விடுதல். நன்கு உழுதால் எருவும் வேண்டாம் எனச் சுட்டினும், அதையும் அதனோடு தொடர்புடைய பிறவற்றையும் அடுத்து விளக்குகிறார். ஏர் உழுதல், எருவிடல், நீர்ப்பாய்ச்சுதல், களைகட்டல், காத்தல் ஆகிய அனைத்தும் உழவுக்கு இன்றியமையாதன. ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு' என்பது அவர்வாக்கு ஏர் உழுதல், எருவிடுதல் ஆகியவை போன்று களைகட்டல், நீர்விடல், காத்தல் ஆகியவையும் உழவுக்கு இன்றியமையாதன. இவை இன்றேல் விளைவு ஏது? எருவிடுதலைப் போன்று களையெடுத்தலும் பருவ மறிந்து நீர்ப்பாய்ச்சலும் செய்து, அனைத்துக்கு மேலாக நன்கு காத்தலைச் செய்வானாயின் விளையுள் பெருகும். எந்த வகையிலும் ஊறுவராமல் காத்தலே உழவின் இன்றியமை யாப் பணி. இந்தக் காப்பில் மேலே கூறிய அனைத்தும் அடங்கும். இவ்வாறு வள்ளுவர் காட்டிய வழி அறிந்து விவசாயி பயிரிடுவானாயின் அவன் விளையுள் பத்தாகநூறாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. ஆட்சியாளர்கள் இந்தவகையில் விவசாயிகளை ஊக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். . இனி, அக்காப்பு எப்படி அமைய வேண்டும் எனக்காட்டும் வள்ளுவர் அந்நிலத்துக்கும் உடையவனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். இக்காலத்தில் பெரிதாகப் GL&LIGL10th p-apogoump53) (absent landlordism) வ்ேலை இல்லாத் திண்டாட்டம் (unemployment) இரண்டையும் போக்கவும் வழிகாட்டுகிறார். நிலத்தை, உடையவனுடைய தலைவியாக்குகிறார். கொண்ட மனைவியை அண்டை ஆடவனிடம் ஒப்படைத்து வாழ யாரும் விரும்பார். அப்படியே நிலமும்; தானே பயிரிட வேண்டும். நாள்தொறும் சென்று காணவேண்டும். காணாப் பயிர் கால்வாசி என்பது பழமொழி, வள்ளுவர்.