பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

சான்றோர் வாக்கு


80 சான்றோர் வாக்கு அக்கால்வாசிக்கும் வழி இல்லை என்கிறார். உரியவன் நாள் தொறும் சென்றுகண்டு மேலே சொல்லிய தேவைகளைச் செய்யாவிடில், நிலப்பெண் ஊடுவாள். அதனால் மகப் பேறாகிய விளையுள் இல்லை. சமுதாயவளர்ச்சி இல்லை. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் என்பது அவர் வாக்கு, அகப்பொருளுக்கே உரிய 'கிழவன் இல்லாள் என்ற சொற்களை எண்ணிப் பெய்கிறார் வள்ளுவர். ஊடிவிடும் என்று அஃறிணைத் தன்மையைச் சுட்டி, ஒரு வேளை அதனால் உரியவன் சோம்புவானாயின் பயனின்றித் தானும் கெட்டு நாட்டையும் கெடுப்பான் என்று காட்டுகின்றார். உண்மையும் அதுதானே! இனி, வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்கஇல்லாத இடத்தில் புது இடங்களை உண்டாக்கத் தேவை இல்லை என்கிறார் வள்ளுவர். எல்லாரும் உழவை மேற் கொள்ள வேண்டுமெனவும் இதைச் செய்யாது 'அசைஇ' இருக்கும் மனிதனையும் சமூகத்தையும் கண்டு நிலப்பெண்’ சிரிப்பாள் எனவும் சொல்லுகிறார். இலம் என்றசைஇ, இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும்’ என்கிறார். எல்லாருக்கும் வாழ்வளிக்கும் அவளை நல்லாள்" எனவே சுட்டுகிறார். காணின்' என்ற சொல்லால் அத்தகைய வரைக் காணக் கூடாது என்கிறார். எனவே இன்றைய அரசாங்கம் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க நாட்டுத் தரிசு நிலங்களைத் திருத்தி, அனைவரையும் உழவுத் தொழிலுக்கு அனுப்பவேண்டும். அதனால் நாட்டின் பல பிரச்சினைகள் நீங்கும். அதற்கு வேண்டுவது கங்கை காவிரி இணைப்பு'என்பன போன்ற ஆக்க வேலைகள். இவ்வாறு வள்ளுவர் உழவின் இன்றியமையாச் சிறப்பை யும் அதன் செயல் முறையையும் காட்டி, நாட்டின் உழவு சிறந்தால் நாடு,நாடாகி உலகு அந்நாட்டைப் போற்றி