பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


அறம் 81 வணங்கும் என்பதைக் கூறி நம்மை உழவுத் தொழிலுக்கு ஆற்றுப்படுத்துகிறார். விவசாய நாடாகிய நம் பாரதம் அவர் வழி நடந்து நலமுறுவதாக! 令 அறம உலகம் தோன்றிய நாள்தொட்டுப் பல்வேறு உயிரினங்கள் தோன்றியும் வளர்ந்தும் வாழ்ந்தும் மாறுபட்டும் நிலை பெற்று வருகின்றன. அவற்றில் சமுதாய விலங்கு எனப் பேசப் பெறும் மனிதன் கூடிவாழும் வாழ்வில் அமைதிபெற வேண்டியவனாகின்றான். அந்தக் கூட்டுவாழ்வே அவனை உயர்ந்தவனாக்குகின்றது. இன்று உலகில் பலகோடி மக்கள் பல்வேறு இனத்தவராக-சமயத்தவராக-மொழியினராகநாட்டவராக வாழ்ந்தாலும்கூட அவர்கள் அனைவரும் மனிதன்' என்ற ஒரே சொல்லாலேயே சுட்டப் பெறு கின்றனர். ஆம்! அம்மனிதன் மனிதனாக வாழவே அறநெறி வழிகாட்டுகின்றது. அறம்' என்றால் என்ன? 'அறம் செயவிரும்பு' என ஒளவையார் இளம்பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகின்றார். முயன்றால் செய்; இல்லையானால் ஆசைப்பட்டாவது முயலலாம் அல்லவா! இந்தத் தொடக்கத்துடன் தன் "ஆத்திசூடி'யினைத் தொடங்கும் அவர் அச்சிறு நூலினுள் அறங்கள் பலவற்றைச் சுட்டுகிறார். மனித சமுதாயம் நல் உணர்வோடு வாழ,வேண்டுமானால் அந்த அறநெறியினைப் பின்பற்றல் அவசியமாகும். நாடுதொறும் வீடுதொறும் போரும் பிணக்கும் பூசலும் உண்டாவதைக் காண்கிறோம். அதனால் பேரழிவுகளும் பிரிவுகளும் நிகழ்கின்றன. ஒன்றி வாழ வேண்டிய மனிதன்