பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சான்றோர் வாக்கு


82, சான்றோர் வாக்கு பலவகையில் வேறுபடுகின்றான். இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? இப்பெரு நோயை உலகிலிருந்து நீக்க வழி இல்லையா? அறம் வழிகாட்ட வில்லையா? ஏன் காட்ட வில்லை! ஒளவையாரே அடுத்த அடியாக "ஆறுவது சினம்' என்கின்றார். இந்த ஒர் அறம் இருந்தாலே போதும். உலகம் சிறந்து வாழா. வள்ளுவர் இதனுடன் காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட்க்கெடும் நோய், என்கின்றார். ஆம்! பேராசையும் கோபமாகிய சினமும் ஒன்றை ஒன்றாக எண்ணி மயங்கி நிற்கும் நிலையும் நீங்கின் உலகில் போர் ஏது? பொறாமை ஏது? பொல்லாக் கொடுமை ஏது? இந்தக் கொடுமைக்கெல்லாம் இடம் கொடுப்பது மனம் அல்லவா? எண்பது கோடி நினைந்து எண்ணுவன' என்று கூறியபடி மனிதனின் மனம் எதை எதையோ எண்ணிப் பார்க்கிறது. அந்தப் பார்வை நல்லதாக அமையின் நாட்டுக்கு நல்லது; அல்லதாயின் அப்போதுதான் பஞ்சமகா பாதகங்கள் உருவாகின்றன. பொய்யும் பொறாமையும் வாதும் சூதும் வஞ்சகமும் வன்கண்மையும் உருவெடுத்து தனி மனிதனையும் சமுதாயத்தையும் நாட்டையும் உலகையும் நலிவுறுத்தும் நிலை தோன்றுகின்றது. எனவே அறம் மனததின்கண் அமைய வேண்டும். இதைத்தான் வள்ளுவர், 'மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன் என அறுதி யிட்டுக் கூறுகிறார். இப்படிச் சொல்வதால் பிற அறங்கள் வேண்டாம் என்பது கருத்தன்று, 'அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்று அவரே மற்றோர் இடத்தில் குறிக்கவில்லையாl பள்ளியில் பயிலும் மாணவன் கல்லூரியில் பயின்று பின் உயரிய 'டாக்டர் பட்டமும் பெற்றபின் 'இதுதான் உயரிய கல்வி என்று கூறினால் மற்றவை கல்வி அல்ல என்பதா பொருள்? இந்த மனத்துக்கண் மாசிலனாகிய உயரிய அறத்