பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


அறம் 83 துக்குப் பிற அறங்களெல்லாம் படிகளாக அமைகின்றன என்பதே வள்ளுவர் உள்ளக்கிடக்கை; உண்மையும் அதுதானே! "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவர் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் இறைவனை ஏன் வேண்டினார்? உள்ளத்தில் கொடுமை வைத்து வெளியே நல்லவர் போலப் பேசுவர் உலகில் உள்ளார்கள், அவர்கள் தொடர்பு வேண்டாம் என நம்மை அவர் எச்சரிக்கிறார். திருவள்ளுவரும் உள்ளத்தால் உள்ளலும் தீதே என நினைப் பதும் குற்றம் என்கிறார். எனவே மனம் தூய்மையாக இருந்தால் மற்றவரை எக்காரணம் கொண்டு வெறுக்கவோ, துாற்றவோ, பழிவாங்கவோ, வேறு வகைக் கொடுமையால் அழிக்கவோ நினைக்க முடியாதல்லவா! அப்போது விட்டிலும் நாட்டிலும் எத்தகைய கொடுமையும் நிலவாதே. இன்று நாட்டிலே சாதியாலே, சமயத்தாலே, மொழி யாலே நடைபெறுகின்ற எத்தனையோ கொடுமைகளைக் காண்கின்றோம். இவையெல்லாம் மனத்துய்மை இல்லாத தாலே அமைகின்றன. ஆம்! இந்திய நாட்டு மக்கள் நாம்’ என்ற ஒருமை உணர்வும். "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற உள்ளத் தெளிவும் இல்லாத காரணந்தானே இந்திய ஒற்றுமையினை -நாட்டு ஒருமைப்பாட்டைச் சிதைக்க நிற்கின்றது. எனவே நாடு ஒற்றுமையுள் திளைக்கவும் உலகம் உய்யவும் மனத்துக்கண் மாசு இல்லாத நல்லறத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். உலகம் உய்ய அந்த உளத் தூய்மையே தேவை. அந்த நல்உள்ளத்தையும் அதன்வழி நல்லுணர்வையும் வளர்ப்போமாக!