பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால் சிறு தொலைநாடியில் அந்த அளவைக் கண்டபோது, காணாத தூரம் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது. பின் அந்த தூரத்தையும் பெருந்தொலைநாடியைக் கொண்டு நோக்கும் போது, காணாது பரந்து நிற்பது இன்னும் விரிவடைகிறது. அறிவும் அத்தகையதே; அறிய அறிய இன்னும் அறிய வேண்டுவது அதிகமாகின்றது. இதையே வள்ளுவர் 'அறிதோறறியாமை கண்டற்றால்’ என உவமை முகத்தால் கூறுகின்றார். எனவே அறிவின் எல்லை விரிந்தது; பரந்தது; எல்லையற்றது; பரம் பொருள் போல் அறுதியிட முடியாதது. ஆயினும் வள்ளுவர் மனித இனம் வாழ, அதற்கு ஒர் எல்லை அமைக்கின்றார். ஆம் வையகம் வாழ அதுவே வழி. சமயத் தலைவர்களும் சமுதாயத்தைச் சீர்திருத்த வருபவரும் உயிர்கள் வாழ வழி வகுக்கும் நல்லவரும் காட்டும் அந்த அறிவுப் பாதையை-அறநெறியை நாம் அனைவரும் படிக்கிறோம்; படிக்கக் கேட்கிறோம். ஆனால் பின்பற்றுகிறோமா? அவ்வாறு பின்பற்றாத மனிதனைப் பார்த்துப் பெரியவர்கள் அறிவற்றதென நாம் கருதும் மரத்தை-விலங்கை, பறவையை, முன்நிறுத்திக் காட்டி அறிவுறுத்துகின்றனர். சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆங்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்கும் தனையும் குளிர்கிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம் என்பது ஒளவை வாக்கு. மரம் வெட்டப்படுகிறது; பின் துளிர்த்து நிழல் தருகிறது. கோடை வெப்பத்தில் வெட்டிய அந்த மனிதனே அந்த மரத்தின் நிழலில் ஒதுங்குகிறான். மரம் டே மனிதா! என்னை வெட்டினாயே! உனக்கு நிழல் ஒரு கேடா என வெருட்டி ஒதுக்குவதில்லையே. அதுபோல அறிவுடையவர்