பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சான்றோர் வாக்கு


86 சான்றோர் வாக்கு தமக்கு எக்காலத்தும் தீங்கிழைக்கும் கொடிய பகைவரானா லும் அவரைத் துன்பம் வருங்கால் தம்மால் கூடியவரையில் காத்து ஒம்புவர் என்கிறார் அவர். ஆம்! அதுதான் மனிதப் பண்பாடு-அறம்-அறிவு-எல்லாம்; இந்த நிலை நம்நாட் டில்-உலகில் உண்டானால் உலகில் எந்த மாறுபாட்டுக்கும் இடமில்லையே. தொல்காப்பியர் காலந் தொடங்கி-காந்தி யார்-பாரதியார் காலம் வரையில் இதைத்தானே எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர். பகைவனுக்கருள்வாய்' என்று பாரதியார் வேண்டுகிறாரே! இவற்றையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிய வள்ளுவர், அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யாவிடல் என்று தெளிவாகக் காட்டி விட்டார். கொடுமை செய்தவரின் கொடுமையை மறந்துவிட்டு, அவனுக்கும் மறுபடி தீமை செய்யாது, நலம்-நல்லன. செய்வதே தலையாய அறிவு என்பது அவர் மனித சமுதா யத்துக்கு அளித்த அறநெறி. அந்த நெறியைப் பின்பற்றாமை யினாலேயே மனிதன் அழிந்து வருகின்றான். மக்கட் சமுதா யமும் இனியாயினும் இந்த உண்மையினை-அறநெறியினை உணர்ந்து வாழின் வையம் வாழும்-வளம் சிறக்கும்!-வற்றா நலம் பெருகும். மனித இனம் இந்த அறநெறியினை ஒம்புவ தாக ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உணர்வினராகி உலகியல் நடத்த வேண்டும் என்ற வள்ளலார் வாழ்த்து நிறைவுறுவதாக! அறிவுடையோர் செயல் 'நாம் செய்த நல்வினையே நமக்குப் பலன்தரும்’ என்ற :சங்க கால ஒளவையார் கொள்கையினைப் புடித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் மனிதன், நேர்மாறான காரி யங்களையே செய்து வந்தான்-செய்து வருகிறான். ஆயிரம்