பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


அறிவுடையோர் செயல் 87 ஆண்டுகள் அந்த வகையில் வாழ்ந்த மனிதனைக் கண்டார் பின்வந்த ஒளவையார்-உளம் நொந்தார்-சான்றோர் வாக் கினை உணர்ந்து உலகம் நடக்கவில்லையே என எண்ணி வருந்தினார். சான்றாண்மை மிக்க அவர் உள்ளம் வாடிற்று. ஆறறிவு படைத்த மனிதன் திருந்தா நிலையில் ஓரறிவுடைய உயிர்களைக் காட்டியாகிலும் திருத்தலாமா என எண்ணிற்று அவர் நல்ல உள்ளம். அந்த அடிப்படையிலேயே பல பாட்டுக் களை ஏதுக்காட்டி எடுத்துரைத்து உலகைத் திருத்த நினைத் தார் பிற்கால ஒளவையார். சாலை ஓரத்தில் வானோங்கிய நல்லமரம் நிழல் தந்து கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ-எதற்காகவோ-அதன் தழைகளையும் கிளைகளையும் வெட்டுவதற்கென ஒரு மனிதன் வருகிறான்-வெட்டியும் விடுகிறான். மரம் மொட் டையாகிறது. அவனும் கிளைகளையும் தழைகளையும் வாரிக் கட்டி வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று விடுகின்றான். ஆனால் அந்த வெட்டுண்ட மரம் தழைக்கத் தொடங்குகிறது. முன்னினும் அதிகமாகக் கப்பும் களையும் விட்டுத் தழைக்கத் தொடங்குகிறது. தழைத்துச் சாலை மருங்கிலே நல்ல நிழலையும் தரத் தொடங்கி விடுகிறது. வெட்டிய மனிதன் வேனிற்காலத்தில் மறுபடியும் அந்த வழியே வருகிறான். வேனிலின் வெம்மை அவனைத் தகைக் கிறது; அவன் திகைக்கிறான். எனவே பக்கத்திலுள்ள அந்தத் தழைத்த மரத்தின் நிழலே தனக்குப் புகலிடமாகக் கொண்டு நிழலினுள் புகுகிறான். அந்த மரமோ, அவன் தன் அங்கங் கள்ையெல்லாம் சிதையச் சிதையத் துண்டித்தவனாயிற்றே என வெறுத்து அவனை ஒதுக்கவில்லை; நிழல் தாராது தான் ஒதுங்கவுமில்லை; மாறாக அவனுக்குக் குளிர் நிழலைத் தந்து வெம்மையைத் தடுத்து அவனுக்கு இதம் செய்கிறது. இந்தக் காட்சியினையே ஒளவையார் திருந்தாத மனிதனுக்கு எடுத்துக்காட்டித் திருந்த வைக்க முயல்கிறார். ஆனாலும்