பக்கம்:சிதறல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

காந்தீயம் அவர்களை அணுகியபோது இரக்கத்தின் அடிப்படையில் அந்த அணுகல் ஏற்பட்டது. அவர்கள் மேல் மட்டத்து மக்கள் உதவி செய்யும் நோக்கில் அணுகினார். 'ஆண்டான் அடிமை' மனோபாவம் அதிலே ஊடுருவிக் கிடந்தது. 'தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு' இது கோயில் உபதேசங்களைப் போலச் சாதாரண விஷயங்களாக இருந்தன.

'ஏழையின் சிரிப்பில்' என்ற தொடர் அமைத்துக் கொடுத்ததே அண்ணாதான். அவன் வாழ்வை மலர வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஊட்டியது அவர் தான். அரசியலில் அவர்களை நேரடியாக இழுத்ததும் அந்த ஆண்டான் அடிமைப் பார்வை அல்ல; தோழமைப் பார்வை. அவர்களும் நேரடியாக அரசியலில் பங்கு கொண்டார்கள். இதை நினைத்துப் பார்க்கிறேன்.

மக்களுக்கு ஒரு நல்ல நேர்மையான அரசாங்கம் அமைந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். அவ்வளவுதான். வளர்ச்சியுள்ள சமுதாயத் திட்டங்கள் உருவாகிவிட்டன என்று கூற முடியாது. பழமையை எப்படி எப்படிக் காப்பாற்ற வேண்டுமோ அப்படிக் காப்பதில் ஒவ்வொரு அரசாங்கமும் முனைகிறது.

காமராசர் கூறிவிட்டதாலேயே மற்றவர்கள் தாழ்ந்து விட்டவர்கள் என்று கூறமுடியாது. மக்கள் யாரைத் தேர்ந்து எடுக்கிறர்களோ அவர்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயகம், அவர்கள் தவறு செய்தால் எதிர்க்கட்சி வலுப் பெற்று விடும். இது நாட்டு நிலைமை. இன்றும் இந்த மக்களுக்கு உறுதியான நல்வாழ்வை அளிக்க அரசாங்கங்கள் முன் வரவில்லை; அவர்களால் முடியாது. அந்த அடிப்படையில் அவர்களுக்கு வாக்கு கிடைக்கவில்லை. ஜனநாயகம் என்பது முடிவு அல்ல; தொடக்கம்; வழி முடிவு சோஷிய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/35&oldid=1280024" இலிருந்து மீள்விக்கப்பட்டது