பக்கம்:சிதறல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

சம். இதுதான் இன்றைய அரசியல்; இன்று எல்லோரும் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏணிப்படியில் நின்று கொண்டிருந்தால் மாடி ஏறிவிட முடியுமா?

இந்த மாதிரி விஷயங்களை அப்பொது மேடை விவாதங்களில் காட்டி இருக்கிறேன். என்னைப் பலபேர் சோஷியலிஸ்டு என்றுதான் சொல்லிக் கொண்டு இருந்தார்கள், மாணவர்களுக்குள் கட்சிகள் பல இருந்தன.

தேர்தலுக்குப் பின் 'ஜனதா' தலையெடுக்க ஆரம்பித்தது. மாணவர்களிடையே காமராசருக்குத் தனி மதிப்பு இருந்தது; இப்பொழுதும் இருந்து கொண்டும் இருக்கிறது. நாங்கள் படிக்கும் நாளில் காமராசர் கட்சி மாணவன்தான் வெற்றி பெற்றான்.

இந்திரா கட்சியா காமராசர் கட்சியா என்பதுதான் அரசியல் பிரச்சனையாக இருந்தது. இந்திரா கட்சி ஆட்சியில் இருந்தது. பதவிகள் காத்துக்கிடந்தபோதும் அவற்றைத் துச்சம் என மதித்துத் தனித்தியங்கிய கட்சிக்காரர்களும் இருந்தார்கள். அவர்கள் துணிவையும் நாட்டுப் பற்றையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. காமராசர் மாபெரும் தலைவர் என்பதை எண்ணிப் பெருமை கொள்கிறேன். "படிக்காத மேதை" என்று சொல்வார்கள். படிக்கிறவர்கள் பேதைகளாக இருக்கும் நாட்டில் படிக்காத மேதைதான் தோன்ற முடியும் என்று எண்ணியது உண்டு. இன்று படித்த இளைஞர்கள் காமராசர் காட்டிய வழியைத்தான் பின்பற்றுகிறார்கள். அவரை ஒப்பற்ற தலைவராக மதிக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். பொதுவாகப் பெண்களுக்கு அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. நான் அழகாகப் பாடுவேன். நாட்டு வாழ்த்துப் பாடிய வாய்ப்பு தான் அவரிடம் சில சொற்கள் பேசும்படி செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/36&oldid=1280025" இலிருந்து மீள்விக்கப்பட்டது